பக்கம்:நூறாசிரியம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

நூறாசிரியம்


67 எக்கர் இடுமணல்


எக்கர் இடுமண லொக்க உலகத்துப்
புக்காங்கு வாழ்ந்து பொன்றுநர் பலரே
அளிதவர் பிறப்பே எளிதவர் நிலையே
ஒளிதக உட்கிளர்ந்து மாணா வினையறப்
பழிசெய் பஞிலத் திரங்கித் தம்முயிர் 5
அரிதின் மாய்த்த பெரியோர் சிலரே
யாண்டவர் பிறந்தவ ராயினும் மாண்டக
வையத் தவர்வா ழுநரே
உய்யுநர் என்போர் அவர்வழி யோரே!


பொழிப்பு:

இவ்வுலகின்கண் பிறந்து வாழ்ந்து இறப்போர் (யாறு குவித்த எக்கரிடத்து மணல் போல எண்ணற்றோராவர். அவர்தம் பிறப்பு இரங்கத் தக்கது. வாழ்க்கை நிலையோ எளிமையுடைத்து. அவர்களுள் மெய்யறிவு பொருந்துதலால் உள்ளம் எழுச்சியுற்று, இழி செயல்களின் நீங்கப் பெற்றுச் சான்றோரால் பழிக்கப்படுவனவற்றைச் செய்யும் மக்கள் தொகுதியின் இழிநிலைக்கு இரக்கமுற்று அம்மக்களைக் கடைத்தேற்றுதற்குத் தாம் மேற்கொண்ட அருமுயற்சியிலே தம்மை மாய்த்துக் கொண்ட பெருமக்கள் மிகச்சிலராவர். அவர்கள் யாண்டுப் பிறந்தவராயினும் இவ்வுலகின்கண் என்றென்றும் சிறப்புற வாழ்ந்து கொண்டிருப்பவராவர். வாழ்க்கையில் ஈடேறுவோர் என்று சொல்லப் பெறுவோர் அப்பெருமக்களின் வழியைப் பின்பற்று வோரேயாவர்.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது

உலகத்துப் பிறந்து வாழ்ந்து இறப்போர் எண்ணற்றோராயினும் அவர்களுள் மெய்யறிவான் மேம்பட்டுச் செய்வினையாற் சிறப்புடையராய், மக்களைக் கடைத்தேற்றும் அருமுயற்சியை மேற்கொண்டு தம் உயிரையும் மாய்த்துக் கொண்ட மிகச் சிலராகிய பெருமக்கள் எங்குப் பிறந்தவராயினும் இவ்வுலகின்கண் என்றென்றும் வாழ்வோர் என்றும் அவர்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/330&oldid=1221399" இலிருந்து மீள்விக்கப்பட்டது