பக்கம்:நூறாசிரியம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

357

நாகரிக மறியா முட்டாள்களுக்கும் நாட்டின் எல்லை காக்கும் வீரர்களுக்கும் அற்றை நாள் மணந்த மணமக்களுக்கும் கணவரைப் பிரிந்த இளம் பெண்டிர்க்கும், குளிரில் நடுங்கும் ஏழைமையாளர்க்கும் இரவில் உறக்கமில்லை; பொது நல விழைவுடைய நன்மக்களுக்கும் அத்தகைய நிலையே என்றவாறு.

புரைமிகு உரைவாய் ..... முழுமாந்தர்க்கும் - குற்றம் மிக்க சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புளித்த கள்ளின் நாற்றம் வீச மற்றையோரிடத்து ஒழுங்குமுறையின்றிப் பழகுகின்ற முட்டாள்களுக்கும்

குற்றமிக்க சொற்களாவன பலுக்கும் முறையானும் பயக்கும் பொருளானும் குளறலும் உளறலுமான குற்றம் மிக்க சொற்கள். குடிமயக்கத்தால் என்ன பேசுகிறோம் என்ற கருத்தில்லாமலே பேசப்படுவன வாகலின் உள்ளீடற்ற சொற்களுமாம். புரை-குற்றம்; உள்ளிடற்ற.

புளிங்கள் - புளித்த கள். நாற தீய நாற்றம் வீச

முறையறப் பழகுதலாவது எவரிடத்தும் அவர்தம் தகுதி நிலைக்குப் பொருந்தாதவாறு பேசியும் நெருங்கியும் உறவாடுதல். முறையற ஒழுங்கு முறையின்றி.

இமையா நோக்கின் ...... பூட்கை யோர்க்கும் - இமைமூடாத கருத்தொடுபட்ட பார்வையால் நாட்டின் எல்லையைக் காக்கின்ற எழுச்சியுற்ற தோளைவுடைய கொள்கை வீரர்க்கும். அமையா-எழுச்சி குன்றாத, பூட்கை கொள்கை.

ஈன்றோர் இசைதர ...... கழிஇள வோர்க்கும்- பெற்றோர் ஒப்புதலளிக்க, தாம் காதல் கொண்டவரையே மணந்து முதல் நாளில் கூடிய மிக்க இளமை வாய்ந்தார்க்கும்.

ஊன்றியோர்-மனத்துப் பதித்த காதலர். தலைநாள்-முதல் நாள். புல்லிய கூடிய, கழி மிகுதி

கைவளை உகுப்ப ...... மெல்லிய லார்க்கும் - முன்கை வளையலை நெகிழவிடவும் கண் நீரை வெளிப்படுத்தவும் மேனி பொலிவிழப்பவும் கணவரைப் பிரிந்து தனித்துறையும் இளம் பெண்டிர்க்கும்.

'நெடுநிலை முன்றில் ...... அளியி னோர்க்கும் - உயர்ந்த கட்டடங்களின் வெளிபுறத் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பணி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும்;

வாழ வீடின்றிச் சாலையோரங்களில் குடியிருக்கும் மக்கள் இராப்பொழுதில் பூட்டிக் கிடக்கும் ஆங்குள்ள பெருங்கட்டடங்களின் வெளிப்புறத் தாழ்வாரத்தில் மழைக்கும் பனிக்கும் ஒதுங்கி ஒண்டிக்கிடக்கும் காட்சி ஈண்டுக் குறிக்கப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/383&oldid=1209659" இலிருந்து மீள்விக்கப்பட்டது