பக்கம்:நூறாசிரியம்.pdf/426

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

நூறாசிரியம்

கண்ட சான்றோர் ஒருவர் அவன்றன் மனைவியின் பண்புநலன்களைப் பாராட்டிக் கூறி அவன்றன் பிழையையுஞ் சுட்டிக்காட்டி அறிவு கொளுத்துமாறு அமைந்தது இப்பாட்டு.

உற்றேம் என நீ பற்றிய ஞான்றே - யாம் இல்லற வாழ்க்கையில் பொருந்தினேம் என்று நீ அவளது கையைப் பற்றிய போதே.

ஞான்று-காலம்.

முற்றும் நினக்கு அவள் உரியள் - அவள் நினக்கே குறைவற உரிமையுடையள் ஆயினாள்.

முற்றும் குறைவற முழுமையாக

அம் குழலும் கற்பின் மானும் கடமையள் - அவ்வாறு நினக்கே உரிமை பூண்டவளாகிய அழகிய கூந்தலை யுடைய அவளும் கற்பினால் சிறந்த கடப்பாடுனர்ந்து செய்யும் இயல்புடையாள்.

கரவு இன்று நேர்ந்த காலையும் நெகிழ்ந்த காலையும் - கள்ளமில்லாமல் நீ அவளொடு பொருந்தியிருந்த காலத்தும் கைநெகிழ்ந்த காலத்தும். கரவு- மறைவு, நேர்தல்-பொருந்துதல். நெகிழ்தல்-பிரிதல்.

ஊர்ம் தண்நினைவும் வினையும் உள்ளத்துப் பரவிய குளிர்ந்த நினைவும் அதற்கேற்பச் செயலும் உடையளாய்.

அன்பு நீரின் இயல்பினது ஆகலின் அன்பார்ந்த நினைவு குளிர்ச்சியுடையதாகக் கூறப்படும். ஊர்தல் பரவுதல் ஊரும் என்பது செய்யுள் நோக்கி ஊர்ம் என இடைய்யே உயிர்கெட்டு நின்றது.

ஒழுங்கு உறப் பூணியன் பேணும் தகையளே வான் நுதல் - முறையாகக் கொழுநனைப் போற்றிப் புரக்கும் தகுதியுடையவளே ஒளி பொருந்திய நெற்றியை யுடையாள்.

பூணியன் என்பது உரிமை பூண்டவன்; பூண்டான் எனப் பொருள்படுவதாகிய கணவனைக் குறிக்குஞ் சொல். கொண்டான் என்பது நோக்குக!

வாள் - ஒளி.

அவளைப் பிரிவு உறும் ஆ இடைப் பொழுதின் - அவளை நீ பிரிவுற்ற அந்த இடைக்காலத்தே

குவளை விழி நீர்வார்தலை எண்ணாது - குவளை மலர்போலும் அவள் கண்களினின்றும் நீர் வழிதலை எண்ணிப்பாராது.

வார்தல் - வழிதல்,