பக்கம்:நூறாசிரியம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

401


இன்னா ஒழுக்கத்து நீ இவண் படுதல் - தீயொழுக்கமுடையவனாய் நீ இங்கே இருப்பது. இன்னா ஒழுக்கமாவது சான்றோர் கடிந்த கட்குடியும் சூதாட்டமும் வரைவின் மகளிர் தொடர்பும் பிறவுமாம்.

என் அமைந்து உரைக்கினும் இழுக்கே - என்ன அமைதியைப் பொருந்தக் கூறினும் குற்றமாவதே.

அமைவு - ஏற்புறு கரணியம்; சமாதானம் என்பது வடசொல்.

எலுவ - இளந் தோழனே!

தோழன் எனப் பொருள்படும் எலுவன் எனுஞ்சொல் விளியேற்று நின்றது.

சான்றோர் கூற்றாகக் கொள்ளக் கிடத்தலின் இளந்தோழனே எனக் கொள்ளப்பட்டது.

ஆயும்காலை - ஆராய்ந்து பார்க்குமிடத்து. ஆய்தல் நுணுகிப் பார்த்தல்

சால்பிற்கு நீயும் உரியை - தும் இல்லறம் பெருமையான் நிறைவுற விளங்குதற்கு நீயும் உரிமையுடையாய்.

சால்பு - பெருமையின் நிறைவு.

அவள் தனியன்றே - அவள் நின்னின் வேறுபட்டவள் அல்லளே!

இப்பாடல் பெருந்திணை என்னும் புறத்தினையும் குறுங்கவி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/427&oldid=1211304" இலிருந்து மீள்விக்கப்பட்டது