பக்கம்:நூறாசிரியம்.pdf/428

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

நூறாசிரியம்


'98 யாக்கை உள்ளொளி'


மடவை நடுமுள் ஏய்ங்குறு பின்னல்
அடர்த்திய பூவோ டாடிய காட்டும்
முற்றாச் சிறுமி முறுவலு முண்டேம்
பற்றாச் சீரை புனைவதுங் கண்டேம்
மொய்விழி நடவிரன் முனைந்துறழ் பெய்து 5
முத்தத் தடுக்கிய முல்லையந் தொடையல்
ஆடிமுன் னணிந்து பாடிய மடுத்தேம்
வகுமா வடுவிழி மகவேட் டாற்குப்
புகுமாண் கற்பொடு புதுநல மாந்த
ஈன்றோ ரீந்ததும் ஈரா னொருபெண் 10
தானினி தீன்ற தகைமையுங் கண்டேம்!
பெருமா மடந்தை வருகையும் போக்கும்
நெருநல் போலும் அம்ம! நிழலென
உருவும் உளத்ததே! உண்டுபோல் வாளே!
எம்மொடு பயின்றா ளெம்மொடு துயின்றாள்! 15
விம்மிய எமக்கு விம்மினள்! உவப்பின்
தாமே மிகுவள்; தம்பசி கரந்தெம்
ஆய்போ லருத்துவள் அக்கை யிலளே!
வரவு நோக்கிச் சிறாரை முடுக்கி
இரவு வேய்குழ லின்முகை நகைநாற 20
எம்மை மனையொடும் இளவோ ரேந்தி
மும்மையும் புரந்த முதுப்பிறப் பவளே!
யாண்டுகொல் ஈண்டே மாண்ட தமக்கை!
மீண்டுங் காணும் பேணுங் கொல்லோ!
அற்றே உண்டோர் குறிப்பே முன்றில் 25
வற்றா நிலைநீர்க் குட்டத் துயர்கரை
ஆயே அழுமுகஞ் சாய்புன லவிழ
ஏயவட் காணா திரந்து குழற
மல்லன் ஒருவன் வல்லெனப் பாய்ந்தே