பக்கம்:நூறாசிரியம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

நூறாசிரியம்

அம் - தொடையில் - அழகிய மாலை

வகுமர்வடு விழி....... மாந்த - மாவடுவைப் பிளந்தது போன்ற கண்ணையுடைய அவள் மகப்பேற்றை விரும்பிய கணவனுக்கு மனைவியாகப் புகுந்த மாட்சி மிக்க கற்பியல் வாழ்க்கையின் புதுமையான இல்லற இன்பந் துய்ப்ப

ஈன்றோர் ஈந்ததும்...... கண்டேம் - கணவனின் பெற்றோர் ஈன்றாங்குத் தானும் இரு ஆண்மகவையும் ஒரு பெண் மகவையும் இனிது ஈன்ற பெருமையையுங் கண்டேம்.

பெருமா மடந்தை வருகையும் போக்கும் - பெருமை வாய்ந்த பேரிளம் பெண்ணாகிய அவள் வந்ததும் சென்றதும்

நெருநல் போலும் அம்ம - நேற்று நடந்தது போல உள்ளன அம்மா! நிழல் என உருவும் உளத்ததே நிழல் போலும் அவளுடைய உருவமும் என் உள்ளத்திலேயே உள்ளது. -

உண்டுபோல் வாளே - உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே எம் உள்ளத்தில் இருக்கின்றாள்.

எம்மொடு பயின்றாள்..... துயின்றாள். - எம்முடனேயே தானும் கல்வி பயின்றாள். எம்முடனேயே தானும் கண்ணுறங்கினாள்.

பயின்றாள் என்பதற்குப் பழகினாள் எனினுமாம். விம்மிய எமக்கு விம்பினள் - யாம் விம்மி அழுதக்கால் எம் பொருட்டுத் தானும் அழுதாள்.

உவப்பின் தாமே மிகுவள்- யாம் மகிழின் அது கண்டு அவளே பெரிதும் மகிழ்வாள்.

தம் பசி கரந்து எம்ஆய்போல் அருத்துவள் - தம் பசியை அடக்கிக்கொண்டு எமக்கு உணவூட்டும் எம் அன்னையாரைப் போலத் தானும் எம்மை உண்பிப்பாள்.

அக்கை இலளே - அவள் எம் அக்கையல்லள்;

அன்னையேயாம் என்றபடி,

வரவு நோக்கிச் சிறாரை முடுக்கி - எம் வருகையை எதிர் பார்த்திருந்து தன் பிள்ளைகளை ஆர்வமுறச் செய்து,

அம்மான் வருகிறார் மாமி வருகிறார் என்றும், நாளை இந்நேரம் வந்து விடுவார் விடியற்காலம் வந்துவிடுவார் என்றும், உனக்குச் சட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/432&oldid=1211320" இலிருந்து மீள்விக்கப்பட்டது