பக்கம்:நூறாசிரியம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

நூறாசிரியம்

உள்உயிர் நெகிழ்ந்து - உயிரின் உள்ளே நெகிழ்ச்சியுற்று.
நெகிழ்தல்- அன்பால் உருகுதல்,
சில்நெய்பெய்து - சிறிதே நெய்யூற்றப்பட்டு.
சின்மை அளவாற் சிறுமை குறித்து நின்றது.
நுண்திரி மாண்ட - மெல்லிய திரியால் சிறந்த
சுடருக்கு இடமானமையின் மாண்ட என்றார்.
வல் வளித்து உண்விளக்கம் ஆகி-கடிது காற்று வீசும் வெளியிடத்தினுள் வைக்கப்பெற்ற விளக்கம் என்னுமாறு ஆகி.
வன்மை கடுமை, வளித்துஉள்-காற்று வீசுவதான வெளியினுள்.
உள்நடுங்கி ஒடுங்கும் - உள்ளம் நடுங்கி அமைந்திருக்கின்ற
உள்-உள்ளம் ஒடுங்குதல் - அமைந்திருத்தல்,
ஒருவன் ஈங்கு உளன் - ஒருவன் ஈண்டு உளன்.
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/438&oldid=1223750" இலிருந்து மீள்விக்கப்பட்டது