பக்கம்:நூறாசிரியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நூறாசிரியம்


10 நாணிள் கட்டுரை


யாங்கியா னாற்றுவ னையே! தூங்குமென்
றாங்குபல் லடிசி லட்ட, ஈங்கிது
நார்ப்பிணை சேக்கை யிழிந்துவெளி நண்ணி,
நீர்வார் செப்பி னளைந்துமண் நிரப்பிச்
சுள்ளி யடுக்கிக் கொள்ளி யூட்டி 5
வெள்ளிலைப் படைய லாயத்து விரித்துப்
பொய்யி னுண்டோர் பையல் மணந்து
செய்மணற் சிற்றில் வைகி வாழ்தலை
நிற்பா லுரைத்ததுங் கேட்டதும் நிகழ்த்தத்
தற்புதுக் கேள்வன் பின்னகந் தாழ்க்க 10
நனிசினந் திளையோன் குஞ்சி நலிக்கவன்
“அம்மே”யென, அவள் அடுத்திஃ தலைக்கவீ
‘தப்பே யெனையா னலற வோடி
வெப்புரை மாறி வீடு கிடத்தி
மேற்பணி மேயவிக் கால்குடை சிறுக்கி 15
மறுகி னிறங்கியப் பீறல் விளித்துக்
கரைக்கு நாணிள் கட்டுரை
உரைக்கப் போதா தொருசிறு நாவே!


பொழிப்பு:

எங்ஙனம் யான் பொறுத்தல் செய்வேன் ஐயனே! தூங்கும் என்று கருதி, யான் அடுக்களைக்கண் பல்வகையா உணவு வகை அடுதல் செய்ய, ஈங்கு இது கிடத்தப் பெற்ற நாரினால் பிணைத்த கட்டிலினின்று இறங்கி வெளிப்போந்து, நீர் வாரும் செப்பின் மண்ணிட்டுக் குழப்பிச் சுள்ளிகள் அடுக்கித் தீயூட்டிச் சமைத்த மண்சோற்றை வெற்றிலை விரித்துத் தன் கூட்டத்தார்க்குப் படையலிட்டுத் தானும் பொய்க்காட்சியாக உண்டு, அச்சிறுவர் கூட்டத்துள்ள ஒரு பையலை விளையாட்டாக மணந்து கொண்டு, தான் மணலாற் செய்த சிற்றில் மருங்கு வாழ்தல் போலும் பொய்யின் ஆடுங்காலத்து, யான் நம் இல்லத்துக்கண் நின்பால் உரைத்ததும் உரைக்கக் கேட்டதும் போன்றதோர் உரை நினைந்து இஃது அவன் பால் உரையாடல் செய்ய, அவ்வுரை கேட்ட இதன் புதுக் கேள்வனாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/70&oldid=1181261" இலிருந்து மீள்விக்கப்பட்டது