பக்கம்:நூறாசிரியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நூறாசிரியம்


12 தீச்சுடர் எழுத்து


எவர்கொல் துணையே! கவர்புற் றனையே!
குவடுபட நடந்த சுவடும் மாறாது;
வான்பட் டதிருங் குரலுந் தேயாது;
வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம்
கொல்லயில் விழியின் இமையுங் குவியாது; 5
முன்னைப் பெருமையின் முங்குபே ருணர்வால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,
ஒச்சிய தடங்கை வீச்சும் ஓயாது;
உயிருணர் ஆரப் பொழிந்துயர் வாழ்க்கைப் 10
பயிர்செழிப் பூரப் பாடினை கொல்லோ!
இனியே
துவரிதழ்த் தாமரை கவர்துளி மாந்தி
உவப்புற முரலும் கருவண் டொப்ப
இயற்கை துங்கும் புலவரும் இல்லர்! 15
மயற்கை அகற்றும் மறவரும் இல்லர்!
மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை!
இருள்துயில் கொண்ட தமிழகம் எழவே
அருள்மொழி நெஞ்சத் தறமும் மடிந்தது!
தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர் 20
உயிர்கடைந் தெடுக்கும் நின்பெரும் பிரிவால்
உள்ளமும் அறிவும் ஓய்ந்த
கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே!


பொழிப்பு:

குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானில் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை ; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வேல் போல் கூரியதுமான நின் விழியின் இமைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/80&oldid=1181326" இலிருந்து மீள்விக்கப்பட்டது