பக்கம்:நூறாசிரியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நூறாசிரியம்


அணத்தல்-நெருங்குதல்-மேலாகி நிற்றல் (அண்- என்னும் சொன் மூல அடியாகப் பிறந்த சொல்-வேர்-அள். (அண்-அண்ணு-அண்டு-அண்டை அடு-அண்-அணை போன்றவற்றை ஒர்க)

அகறல்- அகலுதல் நீங்குதல் அகலம் என்னும் சொல் பரப்பைக் குறித்த பின், இரண்டு பொருள் அகலுமிடத்துப் பிரிவு தோன்றலால் அகலுதல் என்னும் சொற்கு நீங்குதல், விலகுதல் என்னும் பிரிவுப் பொருள் தோன்றிற்றென்க.

ஆகின்று - ஆகிற்று என்பதன் மெலித்தல், வேறுபாடுவேறுபடல். விகாரித்தல் (வ. சொ)

புணர்ந்த தோள் - புணரப் பெற்ற தோள் - தழுவப் பெற்ற தோள்.

பொலிவு - இளமை ஒளி, பொன்-பொல் பொலம்-பொலிவு, மணவாத இளமையோர்க்கு உடலின்கண் உள்ள பொன் போன்றதொரு மினுமினுப்பு. மணஞ் செய்து கொண்டார்க்கு இவ்வொளி மழுங்கித் தோன்றுமாம். திருமணம் செய்விக்கப் பெற்றும் இவ் விளையோளின் பொலிவு குன்றா திருப்பதை எடுத்துக் காட்டி இவள் இல்லற இன்பத்தை நினைவுறத் துய்த்தோள் அல்லள் எனக் குறிப்பிக்கக் கூறப்பெற்றது.

நிணந்த மார்பு - புடைத்து விம்மலுற்ற மார்பகம். நினம்-கொழுப்பு. மதர்ப்பு. நிரைத்தல் கட்டப்படுதலுமாம்.

நிமிர்பு - நிலை நிற்கும் தன்மை அழிகிலை - அழிதல் இல்லை. பெண்டிர்க்குத் தோளும் மார்புமே இளமைக்கும் முதுமைக்கும் வேறுபாடு தோற்றுவிக்கும் கருவிகளாக விருக்கின்றமையின், இளமை யாழியா இளையோள் என்று. காட்டுவான் வேண்டி அவ்வுறுப்புகளின் நலனழியாமை கூறப்பெற்றது.

மன்றற் கூரையும் மடி கலைந் திலையே - மணத்திற்காக உடுத்தப் பெற்ற புதுச்சீரை மனத்தின் பின் மீண்டும் மடிக்கப் பெற்று, மங்கலப் பொருளாகப் பேணிக் காக்கப் பெறுமாகலின், அது மடிக்கப் பெற்ற நிலையிலேயே உள்ளதென்றும், பிறிதொருகால் உடுத்தப்பெறும் வாய்ப்பையும் பெறவில்லை என்றும் குறிக்கலாயிற்று. இனி அதனை என்றும் உடுத்தக் கூடாத தன்மையில் மங்கலம் இழந்தாள் என்று இரக்கந் தோன்றக் கூறியதுமாம்.

கலியெழு கிளைமுன் கவிழ்ந்த புன்றலை - ஆரவாரத்தை எழுப்புகின்ற கிளைஞர்முன் நாணத்தால் கவிழ்ந்த தலை. மணநாட் பொழுதில் நாணத்தால் கவிழப் பெற்ற தலை, ஈண்டுத் துயரால் கவிழப் பெற்றது குறிக்கப் பெற்றது. புனையப் பெற்ற தலையாக இல்லாமல் புனைவில்லா வெறுந் தலையாக இருத்தலை ஈண்டுக் குறித்திடப் புன்றலை எனப்பெற்றது. புன்றலை-புல்லிய தலை, புல்லிது-புன்மையானது.இழிந்தது-எளிமை தோற்றும் இழிசொல். புல் போலும் எளிமையும் இழிவுமாம். தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/88&oldid=1181772" இலிருந்து மீள்விக்கப்பட்டது