பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இடப்பெருக்கத்துடன் இருக்கவேண்டும். இருக்கைகள், ஒளியமைப்பு முதலியன நன்ருக இருத்தலோடு, நடப் பதற்கான இடைவெளி போதுமானத் க இருக்க வேண்டும். மக்கள் தரையில் நடந்து செல்கையில் ஒலி எழாதவாறு இருத்தல்வேண்டும். நூல் அடுக்குகட்குச் சென்ருல் அங்கு வழி அகலமாக இருக்கிறதா, உயர இருக்கும் நூல் வரிசை எட்டக்கூடியதாய் இருக்கிறதா, நூல் இருக்கும் இடங்களுக்கு வழி காட்டும் குறிப்புகளு டன் கூடிய வழி காட்டும் அட்டைகள் எங்கும் இருக்கின றனவா என்றெல்லாம் பார்க்கவேண்டும் . நூல்கள் திறந்த தட்டுக்களில் வைக்கப்படவேண்டும். எல்லோரும் எட்டி எடுக்கும் அளவிற்கு நூல்கள் தட்டுக்களில் இருத் தல் வேண்டும். நூலக அலுவலர் முக மலர்ச்சியுடன் மக்க ளுக்குத் துணை புரிதல்வேண்டும். புதியோர் வந்ததும் வரவேற்று, அன்பாகப் பேசி, அவர் தீம் உள்ளத்தி லிருப்பதை அறிந்து, அவர் திம் விருப்பை நிறைவேற்றி ல்ை, அன்னவர் நூலகத்திற்கு நாளும் வர்த் தொடங்கிடு வர். நூலகமும் நாளும் வளர்மதி போன்று வளரும்.