பக்கம்:நூலக ஆட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்புற முடியாது. எனவே நூல் நிலையத் தலைவர் நூல் வாங்குவதற்குச் செலவிடுங்கால் ஓரளவு சிக்கனமாகவே இருத்தல் வேண்டும். இது தவிர நூல் பரிமாற்றத்தின் மூலமாகவும், நன்கொடையாகவும் நூல்களைப் பெறுவதற்குப் பெருமுயற்சி செய்தல் வேண்டும். இவையிரண்டின் மூலமாகப் பலநூல்களைப் பெற முடியும். அரசினர் வெளியிடும் இலவச வெளியீடுகளையும் வர வழைத்தல் வேண்டும். நல்ல நிலையில் உள்ள பழைய நூல்கள் குறைந்தவிலக்குக் கிடைத்தால் அவைகளையும் நூலகத்திற்கு வாங்கலாம். இவை நிற்க.

முன்னர்க் கூறப்பட்டிருக்கும் ஒன்று முதல் ஐந்து வரையிலுள்ள மூலங்களிலிருந்து (Sources) தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பென்சிலினால் குறியிடப்படும்; அல்லது வகைப்படுத்தப்படும் மூல எண்கள் (Main Class Numbers) அவற்றிற்கு நேரே எழுதப்படும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை நூலக எழுத்தாளர் பின்வரும் குறிப்புக்களுடன் சரிபார்க்க வேண்டும்.

க. நூலகப் பட்டியலின் தொகை (Library Catalogue).
உ. முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் அட்டைகள்
௩. நூல் தேவைக்கு எழுதி அனுப்பிய ஆணையின் படிகள் (Order Copies).

சரிபார்த்து முடிந்தபின்னர் நூலகத்திலில்லாத நூல்களுக்கும் முன்னரே தேர்ந்தெடுக்கப்படாத நூல்களுக்கும் வாங்கப்படாத நூல்களுக்கும் நூலகத்தார் ஒரு

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/27&oldid=1111760" இலிருந்து மீள்விக்கப்பட்டது