பக்கம்:நூலக ஆட்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். சீட்டுக்களுக்குப் பதிலாக சதுர வடிவமான அல்லது வட்ட வடிவமான பித்தளைத் தகடுகளையும் (Tokens) கொடுக்கலாம்.

நூலினைத் திரும்பப்பெறும் முறை

ஒழுங்கானமுறையில் நூல்களைத் திருப்பிக்கொடுக்க உறுப்பினர்கள் பழகுதல் வேண்டும். நூலேத் திரும்பப் பெறும் அலுவலர் நாள் சீட்டில் குறிப்பிட்டிருக்கும் இறுதித் தேதியைக்கொண்டு அந்தத் தேதிக் குறியீடிட்ட பெட்டியில் அந்த நூலுக்குரிய உறுப்பினர்ச் சீட்டுடன் இணைந்திருக்கும் நூல் அட்டையினை எடுத்தல் வேண்டும். அவ்வட்டையில் உள்ள வகைப்படுத்திய எண், வரிசை எண் முதலியன நாள் சீட்டில் உள்ளவற்றோடு ஒத்திருப்பின், நூலைப் பெற்றுக்கொண்டு, நூல் அட்டையினை உறுப்பினர்ச் சீட்டினின்று அகற்றி நூலிலுள்ள அட்டைப்பையில் வைத்துவிட்டு, உறுப்பினர்ச் சீட்டை அவ்வுறுப்பினரிடம் தருதல் வேண்டும். எண்கள் ஒத்துவராவிடில் அந்நூல் அட்டையின் முன்பு இருந்த இடத்தில் வைத்துவிட்டு நூலிற்குரிய சரியான அட்டையை எடுக்க வேண்டும்.

ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நூலினை மற்றொருவர் தனக்கு வேண்டுமென்று முன் கூட்டியே கேட்டிருந்தால், அந்நூல் வந்ததும் அவருக்காக அந்நூலினைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, இச்செய்தினை அவருக்கு அறிவித்தல் வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே வேண்டப்படும் நூல்களை மறந்துவிடாது அவைகள் வந்ததும் கேட்டவருக்கு வழங்குதற்பொருட்டு, விண்ணப்பம் வந்ததும் மரப்பெட்டியிலிருக்கும் உறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/61&oldid=1123192" இலிருந்து மீள்விக்கப்பட்டது