பக்கம்:நூலக ஆட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அலுவல் மிகுந்த நேரங்களில்

கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், அவதியின் காரணமாகவோ நூல் சீட்டை ஒழுங்காக அடுக்கப்படாததின் காரணமாகவோ நூல் சீட்டைத் தேடி எடுப்பதில் இடையூறும் காலங்கழிதலும் ஏற்படலாம். இந்நிலை வரிசையாக நிற்கும் உறுப்பினர்களுக்குப் பொறுமையினை இழக்கும்படிச் செய்யலாம். ஆதலால் ஒரு நூலின் சீட்டை உடனே கண்டுபிடிக்க இயலாவிட்டால் ஒரே எண்ணிட்ட இரட்டைச் சீட்டுக்களை எடுத்து ஒன்றை நூல் பையில் வைத்துவிட்டுப் பிறிதொன்றை நூல் கொண்டு வந்தவரிடம் கொடுக்க வேண்டும். ஓய்வு கிடைத்த நேரத்தில் இவ்விதம் சேர்ந்த நூல்களின் சீட்டுக்களைத் தேடி எடுத்து ஒழுங்காக ஒரு பெட்டியில் அடுக்க வேண்டும். ஒவ்வொரு சீட்டிற்கும் உரியவர் வரும்பொழுது அவரிடமுள்ள இரட்டைச் சீட்டுக்களில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு உறுப்பினரிடம் சீட்டைக்கொடுத்து விடலாம். முன்பே கூறிய ஒழுங்குப்படி நூலே அதற்குரிய இடத்தில் வைத்தல் வேண்டும்.

வழங்கப்பட்ட நூல்களின் சீட்டுக்களை ஒழுங்காகவும் இறுக்கமாகவும் அதற்குரிய பெட்டிகளில் அடுக்க வேண்டும்.

ஒரு உறுப்பினர் தான் எடுத்துச் சென்ற நூலே மீண்டும் ஒருமுறை வேண்டினால் அதனை வழங்கலாம். அதே நூலே வேறொருவர் முன்பே வேண்டியிருந்தால் வழங்குதல் இயலாது. திருப்பிக்கொடுக்க வேண்டிய தேதிக்கு முன்னரே அதனை உறுப்பினர் வேண்டினால் அந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/63&oldid=1123194" இலிருந்து மீள்விக்கப்பட்டது