பக்கம்:நூலக ஆட்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்படி அடுக்குதல் வேண்டும். இரண்டாவது நூலட்டையை நூலில் உள்ள பையில் வைத்துக் கிளை நூலகங்கட்கு அனுப்பவேண்டும். இந்நூலட்டையைக்கொண்டு கிளை நூலகங்கள் நூல்களை வழக்கமான முறையில் வழங்கித் திரும்பப் பெறலாம்.

கிளை நூலகங்களோடு தொடர்பு கொள்ளும் தலைமை நூலகங்கள் தனியாக ஒரு நூல் வழங்கும் ஏடு தயாரித்து அதில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவேண்டும்.

1. நூல் வழங்கும் தேதி.
2. வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை.
3. நூல் வழங்குபவரின் கையெழுத்து.
4. நூலை எடுப்போரின் கையெழுத்து.
5. கிளை நூலகப் பொறுப்பாளரின் கையெழுத்து.
6. கிளை நூலகப் பொறுப்பாளர் பெற்ற நூல் எண்ணிக்கை.
7. நூல்களைப் பெற்ற தேதி.

இஃதே போன்று கிளை நூலகங்களிலும் நூல்களைத் தலைமை நூலகத்திற்குத் திருப்பி அனுப்புதற்கு ஒரு குறிப்பேடு இருக்கவேண்டும். நடமாடும் நூலகம் (Mobile Library) வெளியிடங்களுக்கு நூல்களை எடுத்துச் சென்று வழங்குவதற்கு நூலகத்தார் ஒரு நடமாடும் நூலகம் வைத்திருப்பார்களேயாயின், இந் நடமாடும் நூலகத்தினை ஒரு கிளை நூலகமாகவே அவர்கள் கருதவேண்டும். ஆதலால் இந்நடமாடும் நூலகங்களுக்கு நூல் வழங்கும் முறை. கிளை நூலகங்களுக்கு நூல் வழங்கும் முறையையே ஒத்திருத்தல் வேண்டும். நடமாடும் நூலகமும் கிளை நூலகத்தைப் போன்றே பணியாற்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/66&oldid=1123197" இலிருந்து மீள்விக்கப்பட்டது