பக்கம்:நூல் நிலையம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நூல் நிலையம்

மெசபடோமியாவில்...!

மெசபடோமியாப் புராதன நூலகங்களில் மிகப் பெரிய நூலகம் கைக்வே (Nineveh) என்ற இடத்திற் பேரரசர் அசர்பானிபாலி (Assurbanipal)ளுல் கி.மு. 650ல் தொடங்கப்பட்ட நூலகமாகும். இந்நூலகத்தினைக் கண்டு பிடித்தவர் புதைபொருள் ஆராய்ச்சியாளர், சர். என்றி லாயர்டு ஆவர். இங்கு முப்பதாயிரம் களிமண் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உரிமையாளர்களின் குறியீடு களும், நாற்களே வகைப்படுத்திய குறிகளும் இக்களிமண் தகடுகளிற் காணப்படுவதால் இந்நூலகம் மக்களுக்காகவே அரசரால் திறக்கப்பட்டிருந்தது என்பதை அறிய முடி கின்றது.

கிரேக்க நாட்டில்...!

புராதன மக்களில், கல்வியிலும் கலையிலும் மிகச் சிறந்து விளங்கியவர்கள் கிரேக்கர்களாகும். அறிஞர் அரிச்டாடில் எண்ணிறந்த நூற்களைச் சேகரித்து, அவை களேத் தம் மாணவர்கள் பயன்படுத்தும்படிச் செய்தார். அவரது பள்ளியிற் பயின்ற மாணவர்களில் ஒருவன் ஏதென்சு (Athens) என்னும் நகரிலிருந்து வந்த அரசியற் கைதியாகும். எகிப்து காட்டு மன்னன் முதல் தாலமி (Plolemy I) மிகத் தொன்மையான நூலகங்களில் ஒன்ருன “அலெக்சாண்டிரியா (Alexandria) நூலகத் தினேத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவன் அவ் வேதன்சு காட்டுக் கைதியே ஆம். இந்நூலகமானது கிரேக்கர்களால், உயிரினும் மேலாக ஒம்பப்பட்டதால், காளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வ தாயிற்று. இந்நூலகத்தில் ஒரு காலத்தில் ஏழு லட்சம் ஆாற்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. கி. மு. 47ல் எகிப்து காட்டின் மீது போர் தொடுத்த மாவீரன் ஜூலியசு சீசர் இந்நூலகத்தின் ஒரு பகுதியின் அழிவிற்குக் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/15&oldid=589795" இலிருந்து மீள்விக்கப்பட்டது