பக்கம்:நூல் நிலையம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 21

பெற்றுப் பயன்படுத்தி வந்தனர். 50-க்கு மேற்பட்ட வியாபாரிகள் இந்நூலக உறுப்பினர்களாய் இருந்து வந்தனர். இங்கிலாந்திலிருந்து பல புத்தகங்கள் வர வழைக்கப்பட்டன. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் நாற்கள் கொடுக்கப்பட்டன. புத்தகங்களை ஒழுங்காகத் திருப்பித் தரவேண்டு மென்பதற்காக, புத்தகங்களை எடுத்துச் செல்வோரிடம், அவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகங்களின் விலையின் இரண்டு மடங்கிற்கு உறுதி மொழிச் சீட்டு (promissary note) எழுதி வாங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, கியூபோர்டில் ரெட்வுட் நூலகமும், சார்ல்சு டவுனில் நூலகக் கூட்டுறவுச் சங்க நூலகமும், நியூயார்க்கில் ஒரு நூலகமும் திறக்கப்பட்டன. கி. பி. 1770-ல் கியூ ஹாம்ப்ஷயரிலும், கி. பி. 1796-ல் கியூ செர்சியிலும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. நியூ ஹாம்ப் ஷயர் நூலகம் அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் அரசாங்க நூலகமாக மாறியது.

19.வது ருாற்ருண்டில்:

பத்தொன்பதாவது நாற்றுண்டி ன் தொடக்கத்தில் Ι Ιοι) நூலகங்கள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 50,000 புத்தகங்கள் மக்களுக்காகச் சேகரிக்கப்பட்டிருந்தன.

கி. பி. 1800-ல் வாஷிங்டன் நகரில் தேசிய நூலகம் திறக்கப்பட்டது. 1812-ல் கடந்த போரில் வாஷிங்டன் நகர் எரியூட்டப்பட்டபொழுது இந்நூலகம் அழிந்தது. அடுத்து தாமசு செபர்சன் என்பவர் சேகரித்து வைத்திருந்த நூற்கள் யாவும் அரசியலாரால் வாங்கப்பட்டன. இப் புத்தகங்கள்தான் இன்றைய காங்கிரசு நூலகத்தின் வித்துக்களாகக் கருதப்படுகின்றன. இந்நூற்ருண்டின் தொடக்கத்தில் அமெரிக்ககாட்டுக் கல்வித் துறையிலே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதெனக் கூறலாம். இத்துடன், பொதுமக்களுக்காக அவர்களது வரிப் பணத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/30&oldid=589810" இலிருந்து மீள்விக்கப்பட்டது