பக்கம்:நூல் நிலையம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. நூல் நிலையம்

வுசாங்கிலுள்ள பூன் பல்கலைக் கழகத்திலும், பீபிங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், காண்டனில் மாகாண கல்வி இலாகாவிலும் நூலகப் பயிற்சி தரப்படுகின்றது.

நூலகத்தார் சங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கி. பி. 1929-ல், நாக்கிங் நகரில், இச்சங்கத்தாரால் முதல் நூலக மாநாடு கூட்டப்பட்டது. சுருங்கக்கூறின், ஆசிய நாடுகளில் நூலகத் துறையில் சிறந்துவிளங்கும் நாடுகளது வரிசையில் சீனுவும் இடம்பெறும். o

(குறிப்பு: இப்பகுதிகளில் தரப்பட்டிருக்கும்புள்ளி விவரங்கள் 1935-க்கு முற்பட்டவை.)

இந்தியாவில்

வேத காலம்:

இந்திய வரலாறு வேத காலத்திலிருந்து தொடங்குவது நாமறிந்ததே. ஆனல் வேத காலத்திலும் அதற்கு முற் பட்ட காலத்திலும் இந்திய நூலக வரலாறு குறித்து அறி. தற்குத் தக்க சான்றுகளில்லை. மன்றங்களில் மக்கள் கூடித் தாங்கள் கற்றறிந்த கருத்துக்களே ஒருவருக்கொருவர் கூறிப் பரிமாறிக்கொண்ட முறைதான் பண்டு ப்யின்று வந்திருக்கின்றது. எனவே நூலகங்கள் அன்று தோன்று வதற்குரிய வாய்ப்போ வசதியோ இல்லாது போயிற்று.

புராதன பெளத்த நூலகங்கள்.

கி. மு. காலாவது நூற்ருண்டில், வடநாட்டில் தட்ச சிலம் கல்வியிற் சிறந்த கவின்பெறு நகராய் விளங்கியது என்பதனைப் பெளத்தக் குறிப்புக்களிலிருந்து நம்மால் அறிய முடிகின்றது. மேலும் பெனரிஸ், பாடலிபுத்திரம் இவ்விரண்டிடங்களிலும் இரண்டு கல்லூரிகள் சிறந்து விளங்கின. மேற்கூறிய மூன்று கல்லூரிகளிலும் விலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/43&oldid=589823" இலிருந்து மீள்விக்கப்பட்டது