பக்கம்:நூல் நிலையம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 35

உயர்ந்ததும் அரியதுமான கையெழுத்துச் சுவடிகள் பல சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இவைகளே இந்திய காட்டுப் புராதன நூலகங்களாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கி. பி. 5ாலாவது நூற்ருண்டில் சீன நாட்டு பெளத்த அருளாளர் பாஹியான் இந்தியாவிற்கு வந்தபொழுது, பாடலிபுத்திரம், தாம்ரலிப்தி (Tamiuk) இவ்விரண்டிடங் களிலும் விளங்கிய பெளத்த மடங்களில் மூன்ருண்டு களுக்கு மேல் தங்கி, இங்கிருந்த கையெழுத்துச் சுவடிகளே யெல்லாம் கற்றறிந்து சென்ருர் என்பதை வரலாறு கூறு கின்றது. இதே போன்று அடுத்த இரண்டு நூற்ருண்டு களுக்குப் பின்னர் இந்திய நாட்டிற்கு வந்த இரண்டாவது சீன நாட்டு பெளத்த அருளாளர் 'யுவான் சுவாங்', அன்று சிறந்து விளங்கிய நாளங்தா பல்கலைக் கழகத்தில், வட மொழி பயின்றதோடன்றி, தாய்நாட்டிற்குத் திரும்பிய பொழுது, இச்சர்வகலாசாலே நூலகத்திலிருந்து 500 கட்டு களுக்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகளே எடுத்துச் சென்ருர். ---

நாளந்தா சர்வகலாசா?ல ருாலகம்

கி. பி. ஏழாவது நூற்ருண்டின் இடைப் பகுதியில் எழில்பெறு இந்திய காட்டிற்கு வந்த முன்ருவது சீன நாட்டுப் பெரியாரின் குறிப்புக்களின் துணைகொண்டு, வட நாட்டில் புகழொளி வீசிய நாளந்தா பல்கலைக் கழகத்தைப் பற்றி நம்மால் நன்கு அறியமுடிகின்றது. மூன்ருவது சீனப் பெரியாராகிய ஐசிங் இப்பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகள் பயின்ருர்.

புராதன இந்தியாவின் புகழ்பெற்ற இந்தச் சர்வகலா சாலை, வெளிநாட்டினரெல்லாம் பார்த்துவியந்தது; தாரத்து மக்களெல்லாம் வந்து பயின்றது. நாளந்தா, பீஹார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/44&oldid=589824" இலிருந்து மீள்விக்கப்பட்டது