பக்கம்:நூல் நிலையம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நூல் நிலையம்

மாங்லத்தில் பார்கான் கிராமத்திற்கு அருகில் அமைந்திருக கின்றது. பல பெளத்த மடங்களும் கட்டிடங்களும் சீர் குலைந்து கிடப்பதை இன்றும் இங்கு காணலாம். சமய போதகர்களாகிய மகாவீரர், புத்தர் இவர்களது காலத் திலேயே நாளந்தா புகழ்பெற்றுப் பொலிவுடன் விளங் கியது. ஜைன நாற்களிலிருந்து, காளங்தா, ராஜக்கிருகம் என்னும் சிறப்பு வாய்ந்த பழம்பெரும் கேரத்தின் ஒரு புறத்தில் இருந்ததாகத் தெரிய வருகின்றது. மகாவீரர் பல ஆண்டுகள் இங்கே கழித்தார். புத்தர் பல தடவைகள் இங்கு வந்து சென்றிருக்கின்ருர். பாலி மொழியில் எழுதப் பட்ட இலக்கியங்கள் நாளங்தாவின் எழிலினை நன்கு எடுத்தியம்புகின்றன. புத்தர் பிரானின் சீடரான சாரி புத்திரரின் சைத்தியக் கோயில் நாளங்தாவில்தான் இருக்கின்றது. பேரரசர் அசோகர் இக்கோயிலே வழி பட்டார். மேலும் அவர்தான் இங்கு முதன் முதலாகக் கோயிலைக் கட்டச் செய்தவர். கி. பி. இரண்டாவது நாம் ருண்டில் வாழ்ந்த பெளத்த தத்துவஞானியாகிய காகார்ஐனர் இங்குதான் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கினர். இப் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் பணியாற்றினர். இவர் காலத்தில் வாழ்ந்த சுவிஷ்ணு என்னும் பெளத்தப் பெரியார், பெளத்த மதத்தின் வளர்ச்சியின் பொருட்டு, நூறு கோயில்களுக்கு மேல் இங்கு கட்டச் செய்தார். நாகார்ஜுனர் காலத்திலிருந்து ஏழாவது நாற்ருண்டு, முடிய பெளத்தக் கொள்கைகள் பரவுதற்குத் துணையாக வும், ஆராய்ச்சிக்குச் சிறந்த உறைவிடமாகவும் நாளங்தா சிறந்து விளங்கியது. குப்தப் பேரரசர்கள் காலத்தில்தான் இப் பல்கலைக்கழகம் வளர்ச்சி பெற ஆரம்பித்தது என் பதை, இங்கு புதை பொருள் ஆராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்ட குப்த நாணயங்களாலும் பிற பொருட்களாலும் நம்மால் அறிய முடிகின்றது. சகராதித் தியன் என்னும் அரசல்ை இங்குள்ள பெளத்த மடங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/45&oldid=589825" இலிருந்து மீள்விக்கப்பட்டது