பக்கம்:நூல் நிலையம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 37

கட்டப்பட்டன என்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்ருர், இவ்வரசனே வரலாற்று ஆசிரியர்கள் முதலாவது குமார குப்தன் என்று கருதுகின்றனர்.

இந்திய காட்டுத் தொன்மையான நூலகங்களில் முதன்மையான நூலகம் களாந்தா பல்கலைக்கழக நூலகமே யாகும். இப்பல்கலைக் கழக நூலகம் 'ரத்ைேததி” (Ratnodadhi) என்ற பெயருடன் கின்று நிலவியது. இதன் பொருள் முத்துக் கடல் (Sea of dia.monds) அல்லது அறிவு மணி கொழிக்கும் அலேகடல் ஆகும். இங் நூலகம் ஒன்பது அடுக்கு மாளிகையில் அமைந்திருந்தது என்றும், இந்நூலகத்தில் 12 x 8 அளவுள்ள அறைகள் பல இருந்தன என்றும், இந்திய நாட்டுத் தொல்பொருள் ஆய்வுக் கழகக் குறிப்பொன்று கூறுகின்றது. எட்டாவது நூற்ருண்டில் இந்நூலகம் பெளத்த மத எதிரிகளால் எரியூட்டப்பட்டது.

பொற்காலம்: (குப்தர்கள் காலம்)

இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று புகழ்ந்து பேசப்படும் குப்தர்கள் ஆட்சியின் பொழுது ஆலயங்களில் அறிவு நூற்களும் ஏடுகளும் சேகரித்து வைக்கப்பட்டு, மக்கள் அவைகளைப் பயன்படுத்தச் செய்தனர். கி. பி. ஆருவது நூற்ருண்டைச் சேர்ந்த வல்லபி சாசனத்தின் மூலம் அரசாங்கத்திலிருந்து நன்கொடையும் இந்த அறிவுத் திருப்பணிக்கு அளிக்கப்பட்டது என்பது தெரிய வருகின்றது. ஏழாவது நூற்ருண்டின் தொடக்கத்தி லிருந்து அதை அடுத்த மூன்று நூற்ருண்டுகள் வரை மக்கள் ஒலைச் சுவடிகளைச் சேகரிப்பதில் ஆர்வமும் அக்கரையும் காட்டினர். அவ்வாறு சேகரிப்பதை ஒரு சிலர் பொழுது போக்காகவும் பலர் சிறந்த செயல் என்றும் சிங்தையில் கொண்டு பணிபுரிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/46&oldid=589826" இலிருந்து மீள்விக்கப்பட்டது