பக்கம்:நூல் நிலையம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நூல் நிலையம்

அக்கினி புராணம் என்னும் வடமொழி நூலிலிருந்து அக்காலத்தில் ஒலைச் சுவடிகளைத் தேடித் திரட்டுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்றும் அவைகளைப் பாதுகாப்பதில் அவர்கள் அளவிறந்த அக்கரை காட்டினர் என்றும் தெளிவாகப் புலனுகின்றது. ஒலைச் சுவடியினைத் தேடித் திரட்டுவதன் சிறப்பை, “எவனெருவன் ஒர் ஒலைச் சுவடியினைத் தேடித் தந்து மக்களுக்குப் பயனுாட்டு கிருனே அவனுக்குப் பேரின்பப் பெரு வாழ்வு உண்டு” என்று அக்கினி புராணம் கூறுகின்றது. ஒலைச் சுவடியினை நன்கு பாதுகாத்தனர் என்பது 'எவைெருவன் ஒலைச் சுவடியினைத் திருடுகின்ருனே அவன் தன் ஒரு விழியினே இழப்பதோடு தன் இனத்தோடு இருள் சேரும் இன்ன உலகம் சேர வழி வகுத்துக் கொள்கிருன்” என்றும் அதே நூல் குறிப்பிடுகின்றது.

கி.பி. 8-வது நூருண்டில்:

எட்டாவது நூற்ருண்டிலே பீகார் மன்னர்களாகிய பால் பரம்பரையினர் காலத்தில் விக்கிரம சிலா உதன் தபூர் பல்கலைக் கழக நூலகங்கள் பொலிவுடன் விளங் கின. இவைகளது காலம் கி. பி. எட்டாவது நூற்ருண் டாகும். திபேத் காட்டைச் சேர்ந்த அருளாளர்கள் இங் அநுாலகங்களைப் போற்றிப் புரந்தனர். இதுகாறும் நாம் குறிப்பிட்ட இரு பல்கலைக் கழகப் படிப்பகங்களையும் திபேத் பகுதி அருளாளர்கள் நன்கு பயன்படுத்திய தோடன்றி "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பரந்த உணர்வால் தாம் கற்றதையும் பாலிமொழி, வடமொழியில் சிறந்த காவியங்களையும் கருத்தோவியங் களேயும் தங்கள் தாய்மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர்.

உதன்தபூர் ஒளிவிளக்கு எனப் போற்றிப்புகழப்பட்ட இந்நூலகம் துறவிகள் உறைவதற்காக அமைக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/47&oldid=589827" இலிருந்து மீள்விக்கப்பட்டது