பக்கம்:நூல் நிலையம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 39

அறகிலேயத்தில்தான் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நூால கத்தில் சேகரித்துவைக்கப்பட்டிருந்த நாற்ருெகுதிகளாந்தா பல்கலைக் கழக நூலகத்தைக் காட்டிலும் அளவிலும் அமைப்பிலும் சிறந்திருந்தது என அறிஞர்கள் கூறு கின்றனர். ஆனல் இந்நூலகம் கி. பி. 1202-ல் பக்தியா கில்ஜி என்ற முகம்மதியத் தளபதியின் சீற்றத்திற்கு இரையாகிச் சிதைந்துவிட்டது. ஆத்திரக்காரனின் கோபத் தணலினல் அந்த அறிவாலயம் இடிந்து மண்மேடாயிற்று.

புராதன சைன நூலகங்கள் :

பண்டு தொட்டுப் பெளத்த நூலகங்கள் இருந்ததைப் போன்று சைன நூலகங்களும் நம் காட்டில் சிறந்து விளங்கின. கத்தியவார், குஜரத், பட்டன், சூரத், ஜெசால் மிர், கேம்பே, பட்னர், அகமதாபாத் முதலிய இடங்களில் விளங்கிய சைன மடங்களில் எண்ணிறந்த ஏடுகள்

ஒன் ருக வைக்கப்பட்டிருந்தன. பட்டன் நகரத்தில் விளங்கிய நூலகத்தில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட சைன சமய உண்மைகளே உரைக்கும் ஒலேச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சைன பெளத்த நூலகங்களைப் போல, பெனரிஸ், மைசூர், பப்ளு, சிருங்கேரி, திருகட் முதலிய இடங்களில் உள்ள இந்து மடங்களில் சமயச் சார்பான நூல்கள் தொகுத்துவைக்கப்படலாயின.

11, 12-வது நூற்ருண்டுகளில் விளங்கிய நூலகங் களிலே முறையே உலகப் புகழ்பெற்ற தார்காட்டுப் பேரரசர் போஜனது அரசவை நூலகமும், சாளுக்கிய வேந்தன் விசாலதேவனது அரசாங்க நூலகமும் குறிப் பிடத் தகுந்தவைகளாகும். இவைகளைப்போன்று ஆள் வார், ஜெய்பூர், ஜோத்பூர், பிகானிர், காஷ்மீர், மைசூர், நேபாளம் முதலிய இந்திய நாட்டுப் புராதனத் தனியரசு களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. * = -- *=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/48&oldid=589828" இலிருந்து மீள்விக்கப்பட்டது