பக்கம்:நூல் நிலையம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆால் நிலையம்

மொகலாயர் காலத்தில் :

மொகலாயர் காலத்தில் நம் நாட்டில் நூலக இயக்கம் தொடங்கப் பெருவிட்டாலும், ஒரு சில மொகலாய அரசவை நூலகங்கள் சிறந்துவிளங்கின என்பதை இந்திய வரலாற்றின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

முகம்மதிய மன்னர்களில் முதன் முதலில் அரசாங்க நூலகமொன்றினைத் தொடங்கியவர் கில்ஜி வமிசத்தைச் சேர்ந்த ஜலாலுடீன் கில்ஜி என்ற அரசராவார். மேலும் அவர் அமீர் குஸ்ரூ என்பவரை அந்நூலகத் தலைவராய் நியமித்தார். அதே காலத்தில் வாழ்ந்த கைசாம் உடீன் என்பவரும், ஒரு முகமதிய நூலகத்தினேத் தோற்று வித்தார்.

மொகலாயப் பேரரசில், பல அரசவை நூலகங்கள் திறக்கப்பட்டன. இந்நூலகங்களை மேற்பார்வை இடு வதற்குப் பல அரசாங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்ட னர். பாபர் பேரரசர் காலத்தில் ஆப்கன் காஜிகால்ை ஏற்படுத்தப்பட்ட நூலகம் மிகச் சிறந்து விளங்கியது. ஹ-மாயூனும் காம்ரானும் சிறையிலிருந்தபோது, இக் நூலகத்திலிருந்து அவர்களுக்குப் படிப்பதற்காக நால்கள் அனுப்பப்பட்டன என்று கூறப்படுகின்றது.

பாபரின் மகன் ஹ-மாயூன் சிறந்த கலேப் பிரிய ராவார். இவர் இரண்டாவது தடவையாக ஆட்சியைப் பெற்ற பிறகு, தம்முடைய அழகு மிகு கேளிக்கை மாளிகை (Pleasure house) யாகிய ஷெர்மண்டாலே’ சிறந்ததொரு நூலகமாக்கிக் கிடைத்தற்கரிய கையெழுத் துச் சுவடிகள் பலவற்றை அங்கு சேகரித்து வைத்திருந்தார். இதேபோன்று அறிவிற் சிறந்த அக்பர் பேரரசரும் சிறந்த சுவடிகளை எல்லாம் அரண்மனையில் சேகரித்து வைத்த தோடமையாது, அவைகளை எல்லாம் பொருள் (Subject)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/49&oldid=589829" இலிருந்து மீள்விக்கப்பட்டது