பக்கம்:நூல் நிலையம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 41

வாரியாக வகைப்படுத்தச் (Classification) Goulosirir. அரசாங்க அதிகாரிகளில் பலர் அக்பர் காலத்தில் நாலக அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.

கி. பி. பதினேந்தாவது நூற்ருண்டில் தென்னுட்டில் சிறந்து விளங்கிய வல்லரசுகளில் ஒன்ருன பாமினி வல்லரசின் முதல் அமைச்சராய் விளங்கிய முகமது கவாம் என்பவர் தம் சொந்தச் செலவிலேயே பெரியதொரு காலகத்தினைத் தொடங்கியதோடு கில்லாது, அந்நூலகத் தினை அன்று மிகச் சிறந்து விளங்கிய பீடார் கல்விக் கழகத்துடன் இணைத்து மக்கள் பயன்படுத்தும்படிச் செய் தார். இந்நூலகத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப் பட்டு வந்தமை சிறந்ததொரு செயலாகும். அகமத் நகர், பிஇப்பூர் இவ்விரண்டிடங்களிலும் இரண்டு மொகலாய அநூலகங்கள் சீருடன் விளங்கின.

மொகலாய நூலகங்களைப் பற்றிப் பேசுகையில் ஹைதராபாத் நகரில் வாழ்ந்து வந்த, சையத் பெல் கிராமி யால் தொடங்கப்பட்ட நூலகத்தினைப் பற்றி எண்ணும லிருக்க முடியாது. ஏனெனில் விலையுயர்ந்ததும் பழமை யானதுமான சில பொருட்களும், எண்ே ணிறந்த கை யெழுத்துச் சுவடிகளும் இந்நூலகத்தில் இடம்பெற் றிருந்தன.

ஆங்கிலேயர் காலம்

இந்திய நூலக இயக்கம்:

(இப் பகுதியில் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் கி. பி.

1935 க்கு முற்பட்டவை.)

இந்திய காட்டில் நூலக இயக்கத்தின் தொடக்கம்

கி. பி. 1910-ஆம் ஆண்டில்தான் என்று கூறவேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/50&oldid=589830" இலிருந்து மீள்விக்கப்பட்டது