பக்கம்:நூல் நிலையம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நூல் நிலையம்

இந்த இயக்கத்தினைத் தொடங்கிய பெருமை பரோடா தனி அரசைச் சாரும் முதல் பொது மக்கள் அரசாங்க நூலகத்தினைத் தொடங்கிய பெருமையும் புகழும் இத்தனி யரசிற்குத்தான் உரியது. நூலக வளர்ச்சிக்காக இந்நாட்டு மன்னன் புரிந்த பணியினையும் துணையினையும் நூ லக வர லாற்றறிஞர்கள் என்றும் மறுத்தலாகாது. அம்மன்னர் புரிந்த பணி நூலக இயக்கத்திற்கே ஒர் ஆணியாகும். இவரது பேரார்வத்திற்குக் காரணம் இவர் செய்த அமெரிக் கச் சுற்றுலாவேயாகும். அமெரிக்கச் செலவை முடித்துத் தாயகம் திரும்பிய இம்மன்னர் தம்முடைய தனியரசிலும் மக்களுக்காக அமெரிக்க அரசைப்போல அளவிறந்த பொது நூலகங்களைத் திறக்கவேண்டுமென்று எண்ணினர். டபிள்யூ. ஏ. பார்டன் என்ற அமெரிக்க நூலக அறிஞரை கி. பி. 1910ல் தமது தனியரசிற்கு வரச் செய்து அவரை JET2035# gjø», på Gåsvairiras (Director of Libraries) ஆக்கினர். மூன்ருண்டுகளாய்ப் பேச்சாலும் பேருழைப் பாலும் அவர் புரிந்த தூய தொண்டினல் பரோடா தனி யரசு நாலகத்துறையிலே சிறந்து விளங்கலாயிற்று. திட் டங்கள் பல திட்டப்பெற்றன. ஊராட்சி மன்றங்கள், அரசாங்கம், மக்கீள்-கூட்டுறவில்ை எண்ணிறந்த நூலகங் கள் எங்கும் பொங்கி எழுந்தன. கி. பி. 1929-30ல் தரப் பட்ட புள்ளி விவரப்படி நாற்பத்தைந்து நகர நூலகங் களும் அறுநூற்றுத் தொண்ணுாற்றெட்டுச் சிற்றுார்ப் பொது இலவச நூலகங்களும், நாற்றுத் தொண்ணுாற்ருறு படிப்பகங்களும் இத் தனியரசில் மலரலாயின. ஒரு லட்சத்திற்குமேல் இவ்வாண்டு நூலக வளர்ச்சிக்குச் செல விடப்பட்டது. ஐந்து லட்ச நூற்கள் மக்களால் பயன் படுத்தப்பட்டன.

ஆாலகத்துறைப் பகுதியானது கல்வித் துறைக் குழு வினரின் மேற்பார்வையில் விடப்பட்டது. ஆனல் நூலகப் பகுதிக்கு அரசியலாரின் பேராதரவு இருந்தது. அரசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/51&oldid=589831" இலிருந்து மீள்விக்கப்பட்டது