பக்கம்:நூல் நிலையம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 43:

லார் அளிக்கும் நன்கொடை பதிவு செய்யப்பட்ட பல நூலகங்களுக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டது. நாலகப் பகுதியில் இரண்டு தலைமை அலுவலர்களும், பத்துநூலகக் காப்பாளர்களும், பதினன்கு எழுத்தாளர்களும், பதி னெட்டு ஊழியர்களும், நூற்களைப் பழுது பார்ப்போர் பலரும் பணி புரியலாயினர். பரோடா நகரத்திற்கு உரியன வற்றைக் கவனிப்பதற்கெனவும் சிற்றுார், மற்றும் ஏனைய நகர் நூலகங்களைக் கவனிப்பதற்கெனவும் முறையே தலைமை மேற்பார்வையாளரும் துணை மேற்பார்வையாள ரும் கியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின்படி, மத்திய நூலகமொன்று தலைநகரில் திறக்கப்பட்டது. ஈண்டு மக்கள் யாவரும் சென்று இலவசமாகப் படிக்கலாம்.நூற்கள் பகுதி, செய்தி இதழ்கள் பகுதி, பெண்கள்பகுதி, என இந்நூலகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. குழந்தைகள் விளையாடுவதற்கென ஒரறை ஒதுக்கப்பட்டது. எண்ணி றந்த மக்களால் பயன்படுத்தப்படும் தலே சிறந்த இந்திய நூலகங்களிலே இதுவும் ஒன்ருகக் கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஐயாயிரம் புதிய நாற்கள் வாங்கப் படுகின்றன. அடுத்து சிற்றுார் நூலகப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியின் பேருழைப்பால் தான் காட்டின் பல இடங்களிலும் இருக்கும் மக்கள் நூற்களைப் பெற்றுப் படித்து மகிழ்கின்றனர். இப்பகுதியி லிருந்து மரப்பெட்டிகள் ஒவ்வொன்றிலும் இருபது நாம் கள் வரை வைத்து ஊர்திகளின் துணையால் நாற்கள் காடெங்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் இந்நூலகத் தார் பல இடங்களுக்கும் சென்று படக் காட்சிகளின் மூலம் மக்களைக் களிப்புக் கடலில் ஆழ்த்துகின்றனர். கூட்டங்களேக் கூட்டியும், மர்நாடுகள் நடத்தியும், மக்களே நூலகங்களைப் பற்றி அறியச் செய்தனர். எல்லா மாநில

அநாலகங்களும் ஒன்று சேர்ந்து ஒரு மத்திய நூலகக் கழகத்

தினைத் தொடங்கின. இக்கழகத்தினர், நூலக நுணுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/52&oldid=589832" இலிருந்து மீள்விக்கப்பட்டது