பக்கம்:நூல் நிலையம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 45.

நாட்டத்தையெல்லாம் கவர்ந்ததாகும். அராபிய, பெர்சிய, கையெழுத்துச் சுவடிகள் எண்ணிறந்தனவும், அராபியபெர்சிய கலைஞர்கள் திட்டிய படங்களும், புராதன காண யங்களும், இந்நூலகத்தில் இருக்கின்றன.

வங்காளம் :

வங்காள நூலக இயக்கத்தின் தங்தை டாக்டர் இரவீந்திரநாத் தாகூராவர். வங்காள நூலகக் கழக மொன்று இப்பெரியாரால் தொடங்கப்பட்டது எல்லா மாவட்ட நூலகக் கழகங்களும் இக்கழகத்துடன் இணைக் கப்பட்டன. இவ்வங்காள நூலகச் சங்கமானது பல நூலக மாநாடுகளே நடத்தி, மக்களே நூலக உணர்வு உள்ளவர்களாக மாற்றியது. இம் மாநிலத்தில்தான் நம் நாட்டுத் தேசிய நூலகம் (கல்கத்தாவில்) சிறப்புடன் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருக்கும் 'ராயல் ஏசி யாடிக் சொசைட்டி நாலகமானது” இந்தியப் புராதன நூலகங்களில் ஒன்ருகும். இதன் வளர்ச்சிக்காக 1912 லிருந்து 1929 வரை, 40 லட்ச ரூபாய்க்குமேல், இங்கிலாந்து, நாட்டு மக்கள் நல்கி உள்ளனர். கல்கத்தாவிலிருக்கும், இந்தியப் பொருட்காட்சி சாலையிலும், சித்ர-சிற்பக்” காட்சிசாலையிலும், கிடைத்தற்கரிய நூற்கள் பல சேகரித்து

வைக்கப்பட்டன.

பம்பாய் :

இன்று இந்நகர் கல்வியிற் சிறந்த கவின்பெறு நகராய் விளங்கினலும், தொடக்கத்தில், அரசியலார் நூலகவளர்ச் சிக்காக அவ்வளவு அக்கறை செலுத்தவில்லை. 'அச்சகப் பதிவுச் சட்டத்தினல், பம்பாய் மாநிலத்தில் வெளியிடப் படும் அத்தனை நாற்களும் அரசாங்கத்திற்கு அனுப்பப் பட்டன. ஆனல் அவைகள், கொடுப்பாரும் எடுப் பாருமின்றி, ஓரிடத்தில், பயனில்லாது உறங்கிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/54&oldid=589834" இலிருந்து மீள்விக்கப்பட்டது