பக்கம்:நூல் நிலையம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நூல் நிலையம்

டிருந்தன. மாராட்டிர நூலகச் சங்கம், குசராத்தி நூலகச் சங்கம், கர்நாடக நூலகச் சங்கம்-இம்மூன்று சங்கங் களும் முனைந்து கின்று நூலக வளர்ச்சிக்காகப் பாடுபட லாயின. மாராட்டிர நூலகச் சங்கம், மராட்டி மக்கள் வாழும் பகுதிகளில், நூலக மாநாடுகள் பல கூட்டியும், நூலகப் புள்ளி விவரங்களைச் சேகரித்தும், மராட்டி மொழியில் எழுதப்பட்ட நாற்களே ஊர்கள் தோறும் அனுப்பி மக்களைப் படிக்கச் செய்தும், நூலகப் பணிபுரிய லாயிற்று.

பம்பாய் நகரிலிருக்கும் 'ராயல் ஏசியாடிக் சொசைட்டி நூலகம்” இந்தியப் பெரு நூலகங்களில் ஒன்ருகும். இலக் கிய, விஞ்ஞான, புதை பொருள், இன்னபிறவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்தற் பொருட்டு, கி. பி. 1804-ல் இது தொடங்கப்பட்டது. இருபத்தாறு ஆண்டுகள் கழித்து, இது, லண்டன் 'ராயல் ஏசியாடிக் சொசைட்டி யின்' கிளையாக் மாறி மாண்புடன் விளங்கலாயிற்று. தொடக்கத்தில் ஆண்டிற்கு 35,000 ரூ. வரை இதன் வளர்ச் சிக்குச் செல்வழிக்கப்பட்டது. இதன் புதை பொருள்'சிற்பப் பகுதியானது இன்று வேல்சு இளவரசர் பொருட் காட்சிசாலையோடு இணைக்கப்பட்டுள்ளது.

பர்மா

ரங்கூன் பல்கலைக் கழக நூலகம்தான், பர்மா காட்டுப் பெரிய நூலகமாகும். சட்சன் கல்லூரி நூலகமும், பெர்கார்டு நூலகமும் (ரங்கூன்) இக்காட்டுச் சிறந்த நூல கங்களாகும். பெர்கார்டு நூலகத்தில் 5000-க்கு மேற்பட்ட நம் நாட்டுக் கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. பர்மாவி லிருக்கும் எல்லாப் பெளத்த மடங்களிலும், ஏராளமான சமயச் சார்புள்ள நூற்கள் சேகரித்து வைக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/55&oldid=589835" இலிருந்து மீள்விக்கப்பட்டது