பக்கம்:நூல் நிலையம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 47

மத்திய மாகாணம்-பீடார்

கி. பி. 1928-29-ல் அரசியலார் ரூ. 16,000 மாவட்ட ஆட்சிக் குழுவினருக்கு, கிராமிய நூலகங்கள் தொடங்கு வதற்கு வழங்கினர். மாவட்ட ஆட்சிக் குழுவினரால் 29 பொது நூலகங்களும், அரசினரால் 4 பொது நூலகமும் தொடங்கப்பட்டன.

11_1 ஞ்சாப் :

பஞ்சாப் அரசினர், மாவட்ட ஆணைக் குழுவினரையும் நகராட்சிக் குழுவினரையும், ஊராட்சிக் குழுவினரையும், பொருள் கொடுத்து ஆதரவு தந்து, சீரிய முறையில் நகரங் தோறும், கிராமங்தோறும் நூலகங்களைத் திறக்கச் செய் தனர். மேலும் கூட்டுறவுச் சங்கங்கள் பல, கிராமிய நூலகங்களைத் தங்கள் உறுப்பினர்களுக்குத் தொடங்கி கடத்தலாயின. முதன் முதலில் இம்மாகாணத்தில்தான் இத்தகைய நூலகங்கள் தொடங்கப்பட்டன. பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் அழைப்பின்பேரில் இந்தியாவிற்கு வந்த ஏ. டி. டிக்கின்சன் என்ற அமெரிக்க நூலக வல்லுகர் பஞ்சாப் பல்கலைக் கழக நூலகத்தினேச் செம்மைப்படுத்தி யதோடமையாது, பாலக வகுப்புக்கள் கடத்தியும், நூல கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், பஞ்சாபில் நூலகப் பணிபுரிந்தார். லாகூரில் இருக்கும் பஞ்சாப் மாகிலப் பொது நூலகம், இன்று இந்திய காட்டின் இரண்டாவது பெரு நூலகமாக வைத்து எண்ணப்படுகின்றது.

ஐக்கிய மாகாணம் :

ஐக்கிய மாகாணத்தில் ஐந்து பல்கலைக் கழகங்கள் பார்வியக்கப் பணியாற்றுகின்றன. எனினும் நூலகத் துறையில், இம்மாகாண வளர்ச்சி ஆமை வேகத்தில் தான் காணப்படுகிறது எனலாம். கல்லூரி-பள்ளி நூலகங்கள் வளர்ச்சிக்கு, அரசியலார், கன்கொடைகள் நல்கினரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/56&oldid=589836" இலிருந்து மீள்விக்கப்பட்டது