பக்கம்:நூல் நிலையம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நூல் நிலையம்

ஒழிய ாதுமக்கள் நூலக வளர்ச்சிக்கு ஒன்றும் சிரத்தை காட்டவில்லை எனலாம்.

' காகரி பிரச்சாரினி சபையினர்' ஹறிந்தி மொழி யினைப் பரப்புவதற்காக வேண்டிப் பத்தாயிரத்திற்கு மேற் பட்ட நாற்களையும், எண்ணிறந்த ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்து, மக்களுக்குப் படிக்கக் கொடுத்துதவினர்.

சென்னை மாகாணத்தில் :

சென்னையில், நூலகத்துறையில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பெருமை, சென்னை நூலகச் சங்கத்தாரைத் தான் சாரும். இந்நூலகச் சங்கம் கி. பி. 1928 சனவரி 31-ல், நீதிபதி வி. வி. சீனிவாச அய்யங்கார் தலைமையில் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராய் திரு கே. வி. கிருஷ்ணசாமி அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று டில்லி பல்கலைக் கழகத்தில் நூலகப் பேராசிரியராய் விளங் கும் டாக்டர் எஸ். ஆர். ரெங்களுதன் இதனது செயலாள ராய்ப் பணியாற்ற முன் வந்தார். மாவட்டங்கள் தோறும் சென்று, மக்களது உள்ளத்திலே கிளர்ச்சியையும் எழுச்சி யையும் எழச் செய்து, வீடுகள் தோறும் ஏடுகள் விளக்கம் பெற்றிலங்க வேண்டுமென்று கூறி. இச்சங்கத்தார் நால கப் பணிபுரியலாயினர். இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனுய், சென்னைப் பல்கலைக் கழகத்தினர், நூலகத்தார்க்கு, மூன்று மாதப் படிப்பும் பயிற்சியும் கொடுக்கலாயினர். இதற்குக் காரணமாக இருந்த பெரி யார் திரு. எஸ். சத்தியமூர்த்தி ஆவர். மேலும், முதல் இந்திய நூலகச் செய்தி இதழினை வெளியிட்ட பெருமை நமது மாகாணத்தைத்தான் சாரும். பெசவாடாவிலிருந்து இச்செய்தி இதழ் வெளி வரலாயிற்று.

ஆந்திர தேச நூலகச் சங்கமும் அயராது பாடுபடலா யிற்று. இச்சங்கத்தின் ஆதரவில்தான், கி. பி. 1914-ல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/57&oldid=589837" இலிருந்து மீள்விக்கப்பட்டது