பக்கம்:நூல் நிலையம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 49

பெசவாடாவில், முதல் ஆந்திர நூலக மாநாடு கூட்டப் பெற்றது. இதன் பின்னர், ஆந்திர நாட்டினர் நூலக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். எண்ணிறந்த நூலகங்கள் எங்கும் திறக்கப்பட்டன. இச்சங்கத்தின் பெரு முயற்சியினல்தான், கி. பி. 1919-ல் முதல் இந்திய நூலக மாநாடு, சென்னையில் கூட்டப் பெற்றது. இதன் பின்னரே 'இந்திய நூலகச் சங்கமொன்று' நிறுவப்பட் டது. இச்சங்கத்தின் ஆண்டிறுதிக் கூட்டங்கள், இந்தியா வில் பல இடங்களிலும் நடத்தப் பெற்றன.

சென்னை மாகாணத்தில் எண்ணிறந்த, கல்லூரி, உயர் கிலேப் பள்ளி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இந்நூல கங்களுக்கு அரசியலார் பொருளுதவியும் அவ்வப்பொழுது செய்யலாயினர். பின்வரும் நூலகங்கள் இம்மாகாணத்துத் தலைசிறந்த நூலகங்களாகும்.

(1) அடையார் நூலகம், சென்னை (2) அரசியலார் 'ஒரியண்டல் நூலகம், சென்னை (3) கன்னிமாரா பொது நூலகம், சென்னை (4) தஞ்சைப் பொது நூலகம், தஞ்சாவூர் (5) சென்னைப் பல்கலைக் கழக நூலகம் (6) அண்ணுமலைப் பல்கலைக் கழக நூலகம் (7) நீலகிரி நூலகம், உதகமண்டலம் (8) சென்னை இலக்கிய-ஆசியச் சங்க நூலகம்

மேலும், ஊராட்சிக் குழுவினராலும், நகர் மன்றத் தினராலும் பல படிப்பகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு முனிசிபல் சட்டம் இடம் கொடுத்தது. அரசியலாரும் பொருளுதவி செய்யலாயினர்.

சென்னை நூலகச் சங்கத்தாருக்கு நாம் என்றும் கட மைப் பட்டுள்ளோம். மாட்டு வண்டிகளில் நூற்களை ஏற்றி, சிற்றுார்கள்தோறும் சென்று, அறிவுப் பணிபுரிந்

நூ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/58&oldid=589838" இலிருந்து மீள்விக்கப்பட்டது