பக்கம்:நூல் நிலையம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நூல் நிலையம்

தனர். மருத்துவக் கூடங்களுக்குச் சென்று, நூற்களை மக்களுக்குப் படிக்கக் கொடுத்துதவினர். டாக்டர் அரங்க காதன் எழுதிய நூலகத்துறை பற்றிய நூற்களை எல்லாம் அச்சேற்றி, நம்மனே வருக்கும் கிடைக்கச் செய்த பெருமை சென்னை நூலகச் சங்கத்தாரையே சாரும். நூற்களை வகைப்படுத்திக் குறியீடுகள் வழங்கும் முறைகளில், தலே சிறந்தது என்று உலகினராலும்கூட உயர்த்திப் பேசப் படும், “கோலன் முறையினைக் கண்டுபிடித்த பெரியாரும் டாக்டர் அரங்கநாதனே யாவர். இப்பெரியாருடன் தோளோடு தோளாய் நின்று, நூலகப் பணிபுரியும் மற் ருெரு பெரியார் கே. எம். சிவராமனுவார். இவர் இச் சங்கத்தின் துணைச்செயலாளர் ஆவர்.

இந்திய கையெழுத்துச் சுவடி நூல்கள் :

பத்தொன்பதாவது நாற்ருண்டின் தொடக்கத்தில் அரசியலார், வட்மொழிக் கல்லூரிகளையும், பள்ளிகளையும் திறப்பதற்குப் பெரு ஆதரவு தந்தனர். ஆனல் புராதன இந்திய நாட்டுக் கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதில் ஒரு அக்கறையும் காட்டவில்லை. மக்களும் அவ்வாறே வாளா இருந்தனர். ஆனல் கி. பி. 1911ல், சிம்லாவில் நடந்த கீழைநாட்டுப் பேராசிரியர்கள் மாநாட்டில், பழைய வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதற்குக் கல்கத்தா நகரில் ஒரு மத்திய அலுவலகத்தை ஏற்படுத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது; இம்மாநாட்டினேக் கூட்டியது இந்திய அரசாங்கமாகும். இதன் பின்னர், கையெழுத்துச் சுவடிகளுக்கெனப் பத்து இடங்களில் அலு வலகங்கள் நிறுவப்படவே, மக்கள் கையெழுத்துச் சுவடி களைச்'சேகரிப்பதில் அக்கறையும் ஆர்வமும் காட்டினர். பம்பாய் அரசாங்கம் எண்ணிறந்த ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்ததோடு அமையாது, அவைகளே எல்லா மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணத்தினல், அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/59&oldid=589839" இலிருந்து மீள்விக்கப்பட்டது