பக்கம்:நூல் நிலையம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 51

சுவடிகளை எல்லாம், பூ ைபந்தர்கார் ஆய்வுக் கூடத்திற்கு அன்புடன் அளித்தது. மற்ற மாநிலங்களும் இது போன்று ஏட்டுச் சுவடிகளைச் சேகரிக்கலாயின.

பந்தர்கார் ஆய்வுக் கூடத்திலிருக்கும் வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளின் எண்ணிக்கை 20,000 ஆகும். சென் ஆன ஒரியண்டல் கையெழுத்துச் சுவடிகள் நாலகத் திலிருக்கும் வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளின் எண்ணிக்கை 23,000 ஆகும். மேலும் 10,000க்கு மேற் பட்ட தமிழ் தெலுங்கு கையெழுத்துச் சுவடிகளும் இங் குள்ளன. சென்னே அடையாற்றில் இருக்கும் "தியாச பிக்கல் சங்கத்தின் கையெழுத்துச் சுவடிகள் நூலகம், உலகோரால் உயர்த்திப் பேசும் அளவிற்குச் சிறந்து விளங்குகின்றது. கல்கத்தாவிலிருக்கும் ஆசியச் சங்கத் தினர் நூலகத்தில் 14,000க்கு மேற்பட்ட, வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளும் 6000க்கு மேற்பட்ட அராபிக், பெர்சியன் கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன. பெனரிசி லிருக்கும் வடமொழிக் கல்லூரியில், எண்ணிறந்த சுவடி கள் இடம் பெற்றுள்ளன. வங்காளத்திலிருக்கும் ஆசியச் சங்கத்தாரின் நூலகத் தில் 6000க்கு மேற்பட்ட பெர்சியஅராபிய கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. இச் சுவடி கள் இரங்க பட்டினத்திலிருந்த திப்புசுல்தான் ஆாலகத்தி லிருந்து கொண்டு வரப்பட்டவைகளாகும். புராதன இந்தியப் பேரரசர்களது கையெழுத்துச் சுவடிகளெல்லாம் பாட்ணுவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலை நாடுகளில் நம் நாட்டுச் சுவடிகள்:

கடந்த இரண்டு நூற்ருண்டுகளில், எண்ணிறந்த கையெழுத்துச் சுவடிகளே நம் தாயகத்திலிருந்து, மேலே நாட்டார் பலர் எடுத்துச் சென்றுள்ளதை வரலாறு காட்டு கின்றது. பெரும்பான்மையான சுவடிகள் செர்மானியராம் கொண்டு செல்லப்பட்டன. அவைகளெல்லாம் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/60&oldid=589840" இலிருந்து மீள்விக்கப்பட்டது