பக்கம்:நூல் நிலையம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நூல் நிலையம்

களுடைய தேசீய நூலகத்தை இன்றும் அழகு செய்கின் றன. பெர்லின் நூலகத்தில் 40,000க்கு மேற்பட்ட வட மொழிக் கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. இங்கிலாந் திலிருக்கும் இந்திய அலுவலக நூலகத்தில் 35,000க்கு மேற்பட்ட, வடமொழி-பெர்சிய-அராபியச் சுவடிகள் உள்ளன. திப்புசுல்தான், தானே எழுதிய அவனது கனவுகளே'ப்பற்றிய சுவடிகளும், அவனது குர்ஆனும்: இங்குள்ளன. இங்கிருக்கும் சிறப்பான சுவடிகளில் நூறு தங்க ஒலைகளாலானதும், பாலி மொழியில், எழுதப்பட்டதுமான ஒரு கையெழுத்துச்சுவடி குறிப்பிடத் தக்கதாகும். கத்தியில்ை இவ்வெழுத்துக்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.

ஆக்சுபோர்டு நூலகத்தில் 16,000 வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளும், பாரிசு நூலகத்தில் 12,000 சுவடிகளும் உளளன.

இந்திய காட்டு நூலகங்களில் ஏறத்தாழ 1 லட்சம் கையெழுத்துச் சுவடிகளிருக்கின்றன. சாந்தினிகேதன் விசுவபாரதி நூலகத்திலும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திலும் எண்ணிறந்த சுவடிகள் உள்ளன. *

இந்திய காட்டுத் தனியரசுகளில் பல, கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதில் முனைந்து கின்றன. அவைகளில் பரோடா, மைசூர், நேபால், பிகானிர், ஜெய்பூர், சோட்பூர், காசுமீர், திருவனந்தபுரம் தனியரசுகள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.

லண்டன் மாநகரில் இந்திய நூலகம்:

வணிகத்தின் பொருட்டு நம் வளநாடு வந்த ஆங்கி லேயர்கள், கம்மை அடிமைப்படுத்தியதோடமையாது. ஆட்சிப் பொறுப்பையும் மேற்கொண்டனர். இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/61&oldid=589841" இலிருந்து மீள்விக்கப்பட்டது