பக்கம்:நூல் நிலையம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 53

பின்னரே, அறிவும் திறனுமிக்க, பல ஆங்கிலேயர்கள் கம் நாட்டிற்கு வரலாயினர். வந்தவர்களில் சிலர் நம்நாடு சிறந்ததொரு அறிவுக் களஞ்சியமாய் விளங்குதல் கண்டு வியப்படைந்தனர். சில ஐரோப்பிய அறிஞர்கள் கம் தாயகம் வந்து, வடமொழி பயின்று, ஆராய்ச்சியிலும் ஈடு பட்டனர். இந்திய காட்டுச் சட்ட திட்டங்களை ஒட்டியே ஆட்சி நடத்த விரும்பிய வாரன் ஏசுடிங்சு கி. பி. 1776ல், இந்துச் சட்டங்களே, வடமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின் னர், சர் வில்லியம் சோன்சு என்பவரால், கம் நாட்டுப் யுராதன இலக்கியம், சிற்பம், வரலாறு, இவற்றை ஆராய் தற் பொருட்டு, கல்கத்தாவில், ஆசியச் சங்கத்தை (Asiatic Society) நிறுவினர். இப்பெரியாரது, தளராத உழைப் பினல், பல ஏட்டுச் சுவடிகள் சேகரிக்கப்பட்டன. ஆனல் சேகரித்த ஆங்கிலேயர்கள், தங்கள் தாய்நாடு திரும்பிய பொழுது, அவைகளேயும் உடன் கொண்டு சென்றனர்.

இதனே அறிந்த கம்பெனி டைரக்டர்கள், இந்தியா வின் கலேச் செல்வங்கள் எங்கு பலருக்கும் பயன்படாமல் போய்விடுமோ என அஞ்சி. இந்தியா இல்லம் என்னும் கட்டிடத்தில், இத்தகைய கலைச்செல்வங்களேச் சேகரித்து வைக்க முற்பட்டனர். ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்துக் கொடுத்தவர்கள் போற்றப்பட்டனர். இதற்குப் பேராதரவு தந்தவர் ராபர்ட் ஆர்ம் என்பவராவார். இவரே "மொகல் பேரரசின் வரலாற்றுத் துணுக்குகள்' என்னும் ஆங்கில நூலினே எழுதியவர்.

கம்பெனியார் இட்ட வித்தானது, மரமாகிப் பூத்துக் குலுங்கி, காயாகிக் கனியாவதற்குக் காரணமாக இருந்தவர் சார்லசு வில்கின்சன் ஆவார். பகவத்கீதையை முதலில் மொழி பெயர்த்தவர் இவரே. பதினறு ஆண்டுகள் இங்திய காட்டில் அலுவலராகப் பணியாற்றிய இவர், தம் ஒய்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/62&oldid=589842" இலிருந்து மீள்விக்கப்பட்டது