பக்கம்:நூல் நிலையம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நூல் நிலையம்

நேரத்திலெல்லாம், வடமொழி பயின்று, தம் தாய்நாடு திரும்புங்கால் சிறந்த வடமொழி அறிஞராய்ச் சென்ருர்.

இதற்கிடையில், கம்பெனியார் லண்டனிலேயே இந்தியா நூலகம் ஒன்றினை ஏற்படுத்தினர். பழம் பொருள் கிலேயமொன்றினையும் இதனேடு இணைத்தனர். இவ்விரண்டிற்கும் தலைவராய், சார்லசுவில்கின்சனே நியமித் தனர். இவருக்கு:200 பவுன்கள், ஆண்டுச் சம்பளமாகக் கொடுத்தனர். முதலில் இங்கு வந்து சேர்ந்த பொருள்கள் மூன்று யானே மண்டை ஓடுகள்தான். பாரசீகத்தில் எழு தப்பட்டதும், "மொகல் சரிதம்' அடங்கியதுமாகிய கையெழுத்துச் சுவடி அடுத்து இங்கு அனுப்பப்பட்டது. ராபர்ட் ஆர்ம் பல அரிய நூற்களைத் திரட்டித் தந்தார். மேசர் பீட்சன் என்பவரால், திப்பு சுல்தானின் காட் குறிப் பும், வெள்ளைக்காரனைக் கீழே தள்ளி அறைவதுபோல் அமைக்கப்பெற்ற ஒரு புலியின் பொம்மையும், அனுப்பப் பட்டன. மேலும் பல மண்டை ஓடுகளும், பழைய காண யங்களும், சிலைகளும், திராவகத்தில் போட்டு வைத்த பறவைகளும், விலங்கினங்களும், ஏராளமாகச் சேகரிக்கப் பட்டன. இந்தியாவில் பணியாற்றிய பின்வரும் ஆங்கி லேயர்கள், சிறந்த அக்கறையுடன், நூற்களையும், எட்டுச் சுவடிகளையும் சேகரித்து அனுப்பினர்.

1. கர்னல் மெக்கென்சி, 2. வாரன் ஏசுடிங்சு, 3. ஹாஜ்சன், 4. பிலிப் பிரான்சிசு, 5. லீடன், 6. சர் வில்லியம் ஜோன்சு, 7. கோல்ப்ரூக், 8. கர்னல் பவர். இதற்கிடையில் கி. பி. 1867 ல், இந்திய நூற் பதிவுச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன்படி, இந்தியாவில் வெளியிடப்படும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு படி இந்திய அலுவலக நாலகத்திற்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இதல்ை எண்ணிறந்த நுாற்கள் இங் நூலகத்தில் இடம் பெற்றன. எனவே ஒரு திருத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/63&oldid=589843" இலிருந்து மீள்விக்கப்பட்டது