பக்கம்:நூல் நிலையம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நூல் நிலையம்

வெற்றி காணப் பாடுபடும் அவர்களுக்கு உலகில் வெளி யாகும் நூல்களனைத்தையும் வாங்கிப் படிப்பதற்குரிய வழியோ வசதியோ இல்லை. பொருளாதாரத் துறையில் பின் தங்கிக்கிடக்கும் இச் சமூகம் நூற்களை விலை கொடுத்து வாங்கிப் பெறுதலும் இயலாது. இக் குறையினேப் போக்கவும் நாடெங்கும் அறிவு நீரோடையைப் பாய்ச் சவும் ஏற்பட்டதே பொது நூலகமாகும். இவ்வுண்மையை உணர்ந்த நம் அரசியலார் பொது மக்கள் நலனுக்காகப் பல பொது நூலகங்கள் திறக்க வேண்டுமென்பதற்காகக் கி. பி. 1948 ல் சென்னை நூலகச் சட்டத்தினைக் கொண்டு வந்தனர். நூலகங்களின் வளர்ச்சியின் பொருட்டு இந்திய மாநிலங்களில் முதன் முதலாக நூலகச் சட்டத்தினேக் கொண்டுவந்து வெற்றிபெற்றது. சென்னை மாநிலமாகும். கி. பி. 1950 லிருந்து இச் சட்டம் நடைமுறையிலுள்ளது.

uprofilso Jrsoa53, G539 - (Madras State Library Com

mittee)

இச் சட்டத்தின்படி அரசியலாருக்கு ஆலோசனை கூறுதற்காக மாநில நூலகக்குழு ஒன்று செயலாற்று கின்றது. பின் வருபவர்கள் இக்குழு உறுப்பினர்களாவர். 1. கல்வி அமைச்சர் 2. தல ஆட்சி அமைச்சர் 3. மாநிலக் கல்வித் துறைத் தலைவர் 4 நூலகத் தனி அலுவலர் (Special Officer for Publik Libraries) 5. Qg 65ràor: சட்ட சபையால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்ட சபை உறுப்பினர் 6. ஒரு மேல்சபை உறுப்பினர் (M. L. C.) 7. அண்ணுமலே, சென்னைப் பல்கலைக் கழகச் செயற்குழு உறுப்பினர்களில் தனித் தனியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இருவர் 8. சென்னை, கேரள, கன்னட நூலகச் சங்கங் களின் செயற்குழுவினரில் ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்படும் மூவர் 9. கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/65&oldid=589845" இலிருந்து மீள்விக்கப்பட்டது