பக்கம்:நூல் நிலையம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 57

அமைச்சரால் நியமிக்கப்படும் நூலகத்துறையில் சிறப் பாகப் பயிற்சி பெற்ற ஒருவர் (Librarian) 10. சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவினரில் ஒருவர் 11. ஏனைய மாவட்ட நூலக ஆணைக் குழுவினரில் இருவர். HH

இக் குழுவின் தலைவர் கல்வி அமைச்சராவார். இக் குழுவினரால் திட்டப்பெறும் திட்டங்களைச் செயற் படுத் அதுபவர் மாநில நூலகத் துறைத் தலைவராவார் (D. P. L.). மாநிலக் கல்வித் துறைத் தலைவரே இன்று நூலகத் துறைத் தலைவராய் விளங்குகின்ருர். இதற்கென்று இப் பொழுது தனிப்பட்ட தலைவரில்லே. நூலகத் துறைத் தலை வருக்குத் துணையாகப் பணிபுரியும் நூலகத் தனி அலுவலரே இக் குழுவின் செயலாளராவார். இக்குழு உறுப்பினர்கள் மூன்ருண்டுகள் வரை தொடர்ந்து பதவியிலிருக்கலாம். கல்வி அமைச்சரால் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும் இடங்களில் கடக்கும் நூலகக் கூட்டத்திற்கு வரும் ஒவ் வொரு உறுப்பினரும் பயணச் செலவும், தங்கும் செலவும் சட்டசபை உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் அளவின தாய்ப் பெற்றுக்கொள்ளலாம். கூட்டம் கடப்பதற்குக் குறைந்தது ஐந்து உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். குழுவின் தலைவர் வராவிட்டால் உறுப்பினர்களில் ஒரு வரைக் கூட்டம் கடத்துவதற்குத் தலைவராகத் தேர்ர் தெடுத்துக் கொள்ளலாம். மாநிலக்குழு, உட்குழுக்களே t#uuuớ3 giải Qa trairaraorth (Sub Committees) 2- plử பினர்களில் சிலரைத் தவிர நூலகத் துறையில் சிறந்து விளங்குகின்ற ஒரு சிலரையும் உட்குழு உறுப்பினர் களாய்ச் சேர்த்துக் கொள்ளலாம். நூலக துணுக்கங்கள் சிலவற்றை ஆராய்ந்து முடிவுகட்டுவதற்குரிய உரிமையினே உட்குழுவினருக்கே மாநிலக் குழுவினர் விட்டுவிடலாம்.

மாநிலக் குழுவினர் அரசியலாருக்கு அவர்கள் நடை முறை, செயல் வகைகள் பற்றி ஆலோசனை கூறுவதைப் பற்றிய விடயங்கள் பின் வருவனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/66&oldid=589846" இலிருந்து மீள்விக்கப்பட்டது