பக்கம்:நூல் நிலையம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 61

சுரண்டை, துரத்துக்குடி என்ற மூன்றிடங்களிலும் திறக் கப்பட்டுள்ளன. இவற்றில் துரத்துக்குடி நூலகம், அங் நகர் மன்றத்தினரால், நூலக ஆணைக் குழுவினர்க்கு, மனப்பூர்வமாய் அளிக்கப்பட்டதாகும். முந்நீர்ப் பள்ளம், சிவந்திப்பட்டி, ரெட்டியார்பட்டி, தச்ச கல்லூர். திடியூர், சீவலப்பேரி, மேலப்பாட்டம், தாழையூத்து முதலிய இடங் களில் இம்மாவட்ட நூலக ஆணக் குழுவினரால் வழங்கு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வழங்கு நாலகங் களுக்கு மாதமொருமுறை, மாவட்டத் தாய் நாலகக்தி லிருந்து, சில புத்தகங்களும், செய்தி இதழ்களும், பெட்டி களில் வைத்து, மிதி வண்டிகளின் மூலம் (Cycle) அனுப் பப்படுகின்றன. இவ்வழங்கு நூலகங்கள் பள்ளிகளில் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி முடிந்ததும் மாலே வேளை யில் இவ்வழங்கு நாலகம் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதனைப் பொறுப்பேற்று நடத்து கின்ற ஆசிரியருக்கு, மாவட்ட நூலக ஆணைக் குழுவினர் மாதமொன்றிற்கு ரூ 15 நன்கொடையாக அளிக்கின்றனர். கிளே நூலகங்களுக்குரிய புத்தகங்களும், தாய் நூலகத்தி லேயே வாங்கப்படுகின்றன. வகைப்படுத்தி, பட்டியல் தயாரித்த பின்னரே கிளே நூலகங்களுக்கு நூற்கள் அனுப்பப்படுகின்றன.

கெல்லே மாவட்டத்தைப் போன்று, பிற மாவட்ட நூலக ஆணைக் குழுவினரும் விறுவிறுப்பாகவும் சிறப் பாகவும்பணி ஆற்ற முற்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் : இம்மாவட்ட நூலக ஆணைக் குழு வினர், இதுவரை சாத்துார், வத்திராயிருப்பு, திருவாடானே, இராமேச்சுரம், கமுதி, பரமக்குடி முதலிய இடங்களில் கிளே நூலகங்களைத் திறந்துள்ளனர். இம்மாவட்டத் தாய் நூலகம் சிவகங்கையிலுள்ளது. ராசபாளையம், அருப்புக்கோட்டை நகர் மன்றத்தினர், தாங்கள் கடத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/70&oldid=589850" இலிருந்து மீள்விக்கப்பட்டது