பக்கம்:நூல் நிலையம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நூல் நிலையம்

நூலகத்தின் நிருவாகப் பொறுப்பினே, அண்மையில், மாவட்ட நூலக ஆணைக் குழுவினரிடம் விட்டுவிட்டனர்.

மதுரை : இம்மாவட்டத் தாய் நூலகம் மதுரை மாநகரிலுள்ளது. மற்ருெரு கிளேயும் மதுரை நகரில் திறக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர் மன்ற

நூலக கிருவாகப் பொறுப்பினேயும் இம்மாவட்ட நூலக ஆணேக் குழுவினர் ஏற்றுள்ளனர். அண்மையில்சின்னுளப் பட்டியில் சிறப்புடன் ஒரு கிளே திறக்கப்பட்டுள்ளது. இக்கிளே யினே நடத்துதற்கு, சமுதாய கலத் திட்டத்தின் கீழ் ரூ. 10000 நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் பெண்களுக்கென்று திறக்கப்பட்ட நூலகம், சரிவர நடைபெருததால் திறந்த சிறிது காலத் திற்குப் பின் மூடப்பட்டது.

திருச்சி : திருச்சியிலிருக்கும் தாய் நூலகத்தின் கிளை ஒன்று புதுக்கோட்டையில் திறக்கப்பட்டுள்ளது.

கோவை : இம்மாவட்டத் தாய் நூலகமானது, கோவை நகர் மன்றத்தினர் 1 லட்ச ரூ. செலவில் கட்டிக் கொடுத்த கவினுறு கட்டிடத்தில் பணியாற்றுகின்றது. இதனது கிளையொன்று பொள்ளாச்சியில் உள்ளது. பின் வரும் இடங்களில் வழங்கு நூலகங்கள் திறக்கப் பட்டுள்ளன. ஜில்லிப்பட்டி, வெள்ளாளப்பாளையம், பரியூர், நாஞ்சக்கவுண்டன்பாளேயம், கோலப்பலூர், கரத் தட்டாடிப்பாளையம், புதுவெள்ளியம்பாளையம், கோட்டுப் புள் ளம்பாளையம்.

சேலம் : இம்மாவட்டத்தின் தாய் நூலகம் சேலத்தி லும், இதனது கிளே ஒன்று தருமபுரியிலும் இருக்கின்றன.

செங்கல்பட்டு : இம்மாவட்டக் குழுவினரால், உத்திர மேரூர், ஆலந்துார், திருவள்ளுர் முதலிய இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/71&oldid=589851" இலிருந்து மீள்விக்கப்பட்டது