பக்கம்:நூல் நிலையம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 63

மலபார் : மஞ்சேரி, ஆலத்துார், பான்டலாயினி முதலிய இடங்களில் கிளைகள் செயலாற்றுகின்றன.

சென்னை நூலகக் குழுவினர், சில மாதங்களுக்கு முன்னர்தான், தாய் நூலகத்தை, 'மவுண்ட்' சாலையில் திறந்துள்ளனர்.

சென்னை மாநில நூலகச் சட்டத்திலே சில குறை பாடுகள் உள்ளன. நூலகச் சட்டமானது, சிறிது திருத்தி அமைக்கப்பட்டு, பயிற்சிபெற்ற சில அலுவலர் களே, அரசியலார் நியமித்தால், நூலகத்துறையில் தமிழ் காடு தலைசிறந்து விளங்கும் என்பதில் ஒரு சிறிதும் ஐயம் இல்லே.

(இப்பகுதியில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், 1955, பிப்பிரவரி வரை, நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகும்)

2. இந்திய I ஆா ҺӦЈъ ர். சட்டம் .

கி. பி. 1954, ஏப்ரல் 25ல், இந்தியப் பாராளுமன்றத் தில், கொண்டுவரப்பட்டுள்ள, சட்டத்தின்படி, இந்தியா வில் வெளியிடப்படும் அத்தனே நூற்களையும், வெளியிடு வோர், கல்கத்தாவிலிருக்கும் நம் தேசிய நூலகத்திற்கு ஒவ் வொரு படி அனுப்புதல் வேண்டும். மேலும், இனி நம் தாயகத்தில், டில்லி, பம்பாய், சென்னே நகரங்களிலும், கல்கத்தா தேசிய நூலகத்தைப் போல், தேசிய நூலகங் கள் விளங்கப்பெறும். இந்நூலகங்களுக்கும், மேற் சொன்ன முறையில் நூற்களை அனுப்புதல் வேண்டும். சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகமே, சென்னை மாநிலத் தாய் நூலகமாகும். டில்லியிலுள்ள, இந்தியச் Gouavorir (Secretariate Library) JBravāGuo, 14-dûâû யில் தலைமை நூலகமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/72&oldid=589852" இலிருந்து மீள்விக்கப்பட்டது