பக்கம்:நூல் நிலையம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நூல் நிலையம்

மேற்சொன்ன மசோதாவைக் கொண்டு வந்தவர், இந்தியக் கல்வி அமைச்சரது பாராளு மன்றச் செயலாளர் டாக்டர் மன்மோகன்தாசு ஆகும். இம் மசோதாவினை ஆதரித்து, முடி சூடா மன்னர், பண்டித நேரு, பேசிய பின் னர், இம் மசோதாவானது, சட்டமாக்கப்பட்டது. நேரு பேசுகையில்: இனி நம் தாயகத்தில்,கல்கத்தாவிலிருப்பதைப் போன்று, பம்பாய், சென்னே, டில்லி, என்ற மூன்றிடங் களிலும் தேசிய நூலகங்கள் இருக்குமென்றும், பதிப்பகத் தார். நான்கு படிகளே மத்திய அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டுமென்றும், இது பதிப்பகத்தாருக்குச் செலவில்லாத சிறந்ததொரு விளம்பரமாகுமென்றும் கூறியுள்ளார். அடுத்து மாவட்ட நூலக அமைப்பு முறை எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்பது பற்றி ஆராய்வோம்.

மாவட்ட நூலக அமைப்பு முறை

(DISTRICT LIBRARY SYSTEM)

பார் முழுவதும் அறிவுத் தெளிவும் கருத்து விளக்க மும் பரவ வழிவகுப்பன நூலகங்களாகும். பணக்காரர், ஏழை. கற்ருேர், கல்லாதார். ஆண் பெண் என்ற வேறு பாடின்றி உலக மக்கள் அனைவருக்கும் நூலகங்கள் அறி வெனும் விருந்து அளிக்கின்றன. ஆராய்ச்சி வல்லுநர் களும் அறிஞர் பெருமக்களும் தாம் கண்டதையும் கேட்ட தையும், கருத்தால் அறிந்ததையும் கொண்டு இறவாத உலக இலக்கியங்களே இயற்றுகின்றனர். அத்தகைய அருமை மிக்க புத்தகங்கள் என்ற புது மலர்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலேதான் நூலகம். வண்டு வண்ண மலர்தனே நோக்கி ஓடுதல் போல, வையகமும் நூலகத்தை நோக்கி ஓடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/73&oldid=589853" இலிருந்து மீள்விக்கப்பட்டது