பக்கம்:நூல் நிலையம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 65

அரசாங்கத்தாலும் மாவட்டத்தாலும் கண்காணிக்கப் பட்டு வருகின்ற மாவட்ட நூலகம் அம்மாவட்ட மக்களின் ஒவ்வொருவருக்கும் கலன் விளேக்கத் தோன்றியதாகும். பெருநகரங்களில் நூலகங்கள் பணியாற்றுதல் போலவே மாவட்ட நூலகமும் மாவட்டங்களிற் செயலாற்றுகின்றது: இந்த நூலகத்திற்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களேயும், வசதிகளையும், அரசாங்கத்தின் உதவிகிதித் தொகையினே யும் கொண்டுதான் தொண்டு புரிகின்றது.

மாவட்ட நூலகங்கள் திறம்படச் செயலாற்ற, போதிய தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்ருெகுதியும், உள் ளூர்க் கிளைகள் ஒழுங்குபடப் பணிபுரிய வாய்ப்பளிக்கும் நல்ல அமைப்பு முறையும் இன்றியமையாது வேண்டப் படுவதாகும். தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இல்லாமல் கண்ட கண்ட நூற்களைக் கொண்டிருந்தால் நூலகம் காகி தப் பூஞ்சோலையாகும். சிறந்த அமைப்பு முறை யில்லா விட்டால் நூலகத்தில் கட்டுப்பாட்டையோ ஒழுங்கையோ காண முடியாது. மாவட்ட நூலக ஆனேக் குழுவினரின் ஆலோசனைப்படியே மாவட்ட நூலகத் திட்டங்கள் இட் டப்படுகின்றன. உள்ளுர் ஆசிரியர்களின் உதவியைக் கொண்டு வெளியிடங்களில் நூலகத்திற்குரிய நூற்களைப் பெறுதலும், மக்களுக்குக் .ெ கா டு த் த லு ம் ஒரு முறையாகும். மாவட்ட நூலக ஆணைக் குழுவினருடன் கலந்த பிறகு மாவட்டத்தில் நூலகங்களைத் தோற்றுவித் தற்குரிய இடங்களே மாவட்ட மத்திய நூலக அதிகாரி (Dt. Librarian) தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்தும், தங்கள் ஊர்களில் நூலகங்களே ஏற் படுத்தவேண்டும் என்ற வேண்டுகோள் அறிக்கை ஒன்று அனுப்பப்படவேண்டும். அந்தந்த ஊர் மக்கள் தங்களுக் குள்ளே உள்ளுர்க் குழு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அக் குழு ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளுர்க் குழுவின் ஆட்சி முழுவதையும் கண்காணிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/74&oldid=589854" இலிருந்து மீள்விக்கப்பட்டது