பக்கம்:நூல் நிலையம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நூல் நிலையம்

பொறுப்பு செயலாளரையேதான் சேரும். மாவட்ட நூல கத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து நூற்கள் பின்னர் தனிப் பெட்டிகளில் நல்ல பாதுகாப்புடன் ஊர்ப்பகுதி களுக்கு அனுப்பப்படும். பள்ளிக்கூடங்களிலிருந்தோ வேறு வசதியான இடங்களிலிருந்தோ நூற்கள் மக்கட்குத் தர வசதி செய்யப்படும். நூலகக் குழுவினர் ஊர் மக்க ளுக்குப் புரியும் அரும்பணியினே உணர்ந்து மக்கள் தங்கள் ஆதரவையும் ஆசிரியர்கள் தமது அரிய ஒத்துழைப்பினையும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் தங்கள் முயற்சியையும் அளித்தால் இம்முறையில்ை நாம் பெரியதோர் வெற்றியை காண்போம் என்பது உறுதியாம். கிளைகளை கிறுவுவதில் வேருெரு முறையும் இருக்கிறது. ஆட்சித் துறையினை மேற்கொள்ள ஊர்ப் பகுதியில் ஒரு செயற் குழுவை ஏற்படுத்திய பிறகு நூலகங்களே ஏற்படுத்துதல் நலமாகும். தொடர்ச்சியான குறையாத ஊக்கமும், தனிப்பட்டவர் களின் தளராத உழைப்பும் இந்த முறையை அமுலுக்குக் கொண்டுவர இன்றியமையாது வேண்டப்படுவதாகும். இந்த முறையில் ஊர்ச் செயற்குழு ஒர் உறுதி வாய்ந்த அமைப்பாக மாறுகிறது. உறுப்பினர்கள் தங்கள் கருத் 'துக்களை விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க நல்ல

வாய்ப்ப அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட நூலகத் தலைமை அலுவலகம்

நூலகத் துறையிற் பயிற்சியும் நல்ல அனுபவமும் மிக்கவர் நூலகத் துறைத் தலைவராக இருக்கவேண்டும். அவர் நூலகத் துறைப் பயிற்சிப் பட்டம் பெற்றவராக இருந்தால் இன்னும் கலமாகும். குறைந்தது நூலகத் துறையில் ஒராண்டு அனுபவமாவது அவர்க்கு இருத்தல் வேண்டும். பயிற்சி இல்லையென்ருல் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், புத்தகங்களைப் பிரிவு செய்து நிரல் படுத் தல், அலுவலகக் குறிப்பேடுகளேப் பாதுகாத்தல் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/75&oldid=589855" இலிருந்து மீள்விக்கப்பட்டது