பக்கம்:நூல் நிலையம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 67

பல பணிகளே நூலகத் தலைவராற் செய்ய முடியாதுபோம். மாவட்ட நூலக ஆட்சிக் குழுவிற்கும், அரசாங்கத்திற்கும் நூலகத் துறைத் தலைவர் பொறுப்பாளியாவார். நூலகத் தைக் குறித்த செயல்கள் அனைத்திற்கும் அரசாங்கத்திற்கு விளக்கம் தரும் பொறுப்பும் அவரைத்தான் சாரும். மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றுார்களிலும் பேரூர்களிலும் கிளை நூலகங்களே கிறுவுவதற்கும் அந்நூலகங்களின் நடைமுறைகளே நன்கு கண்காணிப்பதற்கும் நூலகத் துறைத் தலைவர் தலைவாய்ந்தவராவர். இந்த விபரங் களில் ஆலோசனைகளைத் தருவதற்கு மட்டுமே நூலகத் துறைக் குழு முன்வரும். நூலகத் துறைத் தலைவருக்கு உதவியாக ஒரு கணக்கியற்றுறை எழுத்தாளரும் கையச்சு வினேஞரும் (Typist) ஒரு எழுத்தாளரும், இரு பணியா ளரும் (attendars), இரு வேலை யாட்களும் பணியாற்று வர். நாலகங்கள் அமைந்திருக்கவேண்டிய இடத்தைப் பற்றிய சிறு குறிப்பை இனிக் காணலாம்.

படிப்பகமாகவும், நாற் ருெகுதிகளே அடுக்கி வைப் பதற்கு வசதியாகவும் பயன்படுகின்ற ஒரு பெரிய அறை ஆாலகத்தில் அமைந்திருத்தல் வேண்டும். மூவாயிரம் சதுர அடி பரப்பளவுள்ளதாக அங்த அறை இருப்பது கல்லது. பதியிைரம் நாற்களே வைப்பதற்கும் முப்பது பேர் அமர்ந்து அமைதியாகப் படிப்பதற்கும் ஏற்ற முறையில் அந்த அறை அமையப் பெறும். அலுவலக வேலைக்கான அறை ஒன்று, பெட்டிகள் முதலியன போட்டு வைக்க ஒரு அறை, நூலகத் துறைத் தலைவருக்கு ஒரு அறை, என மூன்று சிறு அறைகள் இருக்கவேண்டும். புத்தகம் வைக் கும் அலமாரிகள் ஏழடி உயரமும், ஆறரை அடி அகலமும், நாற்களே அடுக்கி வைக்கும் இடையீடுகளின் உயரம் ஒன்றறை அடியும் கொண்டதாயிருந்தால் ஒரலமாரியில் ஆயிரம் புத்தகங்கள் அடுக்கி வைக்கலாம். புத்தக அல மாரிகளுக்கு இடையில் காலரை அடி அளவு இடை வைளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/76&oldid=589856" இலிருந்து மீள்விக்கப்பட்டது