பக்கம்:நூல் நிலையம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நூல் நிலையம்

இருக்க வேண்டும். ஓர் உறுப்பினர் வந்து அமர்ந்து படிக்க முப்பது சதுர அடி பரப்புள்ள இடம் அமைக்கவேண்டும். நூற்களை வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்பப் புத்தக அலமாரிகள் வேண்டப்படும். உள்ளூர்ப்புற நூல் கிலேயங் களில் அடிக்கடி தலைமை அலுவலகத்தால் புத்தகங்கள் மாற்றப்படுமாதலால் தலைமை அலுவலகத்தில் ஒழுங்காகப் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். அலமாரிகள் பெரியதாகவும் அதிகமாகவும் இருப்பதைக் காட்டிலும் உரமானதாகவும் தூய்மையானதாகவும் இருப் பதை நினைவிற்கொள்ள வேண்டும். சிற்றுார்களிலும் பேரூர்களிலும் விளங்கும் நூலகக் கிளைகளுக்கு ஒர் உற்பத் தித் தொழிற்சாலையாக மாவட்டத் தலைமை நூலக அலு வலகம் விளங்குகிறது. நூலகத்திற்குரிய பல முக்கிய குறிப்பேடுகளேயும்கூட அஞ்சலட்டை அளவில் ஒழுங் காகத் தயாரித்து வைக்கலாம். ஏற்ற அளவில் அட்டை களைத் தயாரித்து வைத்துக் கொண்டு திறம்படச் செய லாற்றலாம். தலைமை நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கிளே நூலகங்களுக்கு அனுப்புவதற்குரிய போக்குவரத்து வசதிகளை, வசதிக்கும் தேவைக்குமேற்ப எப்படி வேண்டு மாலுைம் செய்து கொள்ளலாம்.

செயல் முறை :

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து நூலகங்களில் வைப் பது, குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். நல்ல புத்தகங் களைத் தேர்ந்தெடுத்து வைப்பது காட்டுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் கலம் விளைவிப்பதாகும். எல்லாப் பொருள் களைப் பற்றிய நூற்களையும் ஒரளவு வாங்கி வைக்க முயல வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்களை எடுத்துச் செல்வதில் மக்கள் ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடிக்க வேண் டும், படிக்கவேண்டும் என்ற உணர்வும் பெறவேண்டும். விலையினை மட்டும் பொருளாக வைத்துப் புத்தகங்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/77&oldid=589857" இலிருந்து மீள்விக்கப்பட்டது