பக்கம்:நூல் நிலையம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 69

வாங்குவது கூடாது. கல்ல புத்தகங்களே உரிய விலை கொடுத்து வாங்கவேண்டும். விலைகளைக் கணக்காகக் கொண்டு புத்தகங்களை வாங்குவது பொருளாதாரத் தின் பகுதியாதலால் இதற்கு உரிய அக்கறையைச் செலுத் தல் வேண்டும். மக்கள் மனங்கவரும் நூற்களைப் பற்றிய கருத்துக்களை அறிந்து அதற்கேற்றபடி நூற்களே வாங்க வும், எல்லாத் தலைப்புக்களைப் (Subjects) பற்றிய நூற் களைப் பெறவும் முற்படவேண்டும். இதல்ை மக்கள் மனம் கவரும் நூற்களை மட்டுமே வாங்க வேண்டுமென்பதில்லை. எண்ணிக்கை குறைவென்ருலும் எல்லாப் பொருள்களைப் பற்றிய புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன என்ற மன நிறைவு மக்களுக்கு ஏற்படவேண்டும். நூலகத்தில் உயிருள்ள நூற்கள் உள்ளன என்று ஊரார் உரைக்க வேண்டும். புத்தகங்களை வாங்கிப் பதிவு செய்யவும், பிரிவு படுத்தி வைக்கவும், நூலகங்களில் உரிய அக்கறை செலுத்தப்பட வேண்டும். இந்த முறையில் கவனம் செலுத்தப்பட்டால்தான் நூலகத்தை மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள முடியும். நூலக ஆட்சித் துறையில் பின்வரும் ஐந்து பகுதிகளும் குறிப்பிடத் தகுந்தவை களாகும்:

(1) நூற்களைத் தருவதும் திருப்பிப் பெறுவதும் பற்றிய குறிப்புக்கள் எழுதி வைத்தல், (issues and returns). --

(2) நூற்கள் வாங்கிச் செல்பவர் பெயர்ப் பட்டி Lodi (issue register) » fluoros shops, L13A செய்தல்.

(3) குறித்த நாளில் புத்தகம் திருப்பித்தரப்படா விட்டாலோ, அன்றி நூற்களைத் தொலைத் தாலோ, அதற்குரிய அபராதம் விதித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/78&oldid=589858" இலிருந்து மீள்விக்கப்பட்டது