பக்கம்:நூல் நிலையம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நூல் நிலையம்

(4) நூலகத்தின் செலவுக் கணக்கு விவரம் தயாரித்

தல்.

(5) பிற செலவினங்கள் பற்றிக் குறிப்புக்கள் எழுது

தல்.

நூற்களைப் பிறருக்கு வழங்குவதில், சீட்டு முறையே பெரிய நூலகங்களில் கையாளப்படுகின்றது. நூலக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு “g°ı olG) #6ir” (Borrower”s tickets) @ &# mr@.##ı`ı @ı 1 mil b. இரண்டு சீட்டுகள் கொடுக்கப்பட்டால் இரண்டு புத்தகங் களே, ஒருவர் எடுத்துக்கொள்ளலாம். நூலகத்திற் சென்று இரண்டு நூற்களை ஒருவன் எடுத்துச் செல்ல விரும்பில்ை, இவ்விரண்டு சீட்டுக்களையும், நாற்களே வழங்குபவரிடம் தருதல் வேண்டும். நாற்களை வழங்குபவர் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, பின் புத்தகத்தின் அட்டையின் உட் புறத்திலிருக்கும் அட்டைப் “பையில்” சொருகி வைக்கப் பட்டிருக்கும் புத்தகச் சீட்டை (Book Card) எடுத்து டிக்கெட்டுடன் இணைத்து வைத்து, திருப்பித் தரவேண்டிய தேதியையும் குறித்து வைத்து, ஒழுங்கான முறையில் அடுக்கி வைத்து விடுவார். புத்தகச் சீட்டானது, புத்தகத் தின் பெயர், அதன் ஆசிரியர், வகைப்படுத்திய எண். (classification number) outfloor Grør (Accession number) இவைகளைக் குறிக்கும். உறுப்பினர் டிக்கெட் டில் உறுப்பினர்களைப் பற்றிய முழு விவரமும் குறிக்கப் பட்டிருக்கும். இவ்விரண்டின் உதவியால், எடுத்துச் செல் லப்பட்ட புத்தகத்தினையும், எடுத்துச் சென்றவர் பெயரை யும் எவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம். புத்தகத் தைத் திருப்பித் தரும்பொழுது, டிக்கெட்டோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகச் சீட்டினே எடுத்துப் பழைய படியும் புத்தகத்தில் வைத்து, பின் 'டிக்கெட்டு அதற்குரிய வரிடம் திருப்பித்தரப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/79&oldid=589859" இலிருந்து மீள்விக்கப்பட்டது