பக்கம்:நூல் நிலையம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 71

மற்ருெரு முறை, சிறு புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு நூற்களை வழங்குதலாகும். இப்பட்டியலில் (Issue register) உறுப்பினர் பெயர், வயது, தகுதி, முகவரி முதலியன குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களிடமிருந்தும், தரக் கர்லம் தாழ்த்து பவர்களிடமிருந்தும், அபராதத் தொகை பெறுவதை ஒரு சிலர் விரும்பாமலிருக்கலாம். எனினும் நூலக ஒழுங்கு முறைக்கு அது ஏற்றதாகும். புத்தகத் தினை எடுத்துச் செல்வோர், புத்தகத் தினைத் தொலைத்தால் அதற்குரிய விலையினைத் தந்துவிடவேண்டும். அன்ருடம் ஏற்படும் தபால் செலவு, போக்குவரத்துச் செலவு போன்ற வைகளுக்கு ரசீதுகள் வைத்துக் கொள்ளவேண்டும். இவை களெல்லாம் பின்னர் தணிக்கையாளரால் தணிக்கை செய் யப்படும்.

இரயில் மூலம் போக்குவரத்து நடைபெற்ருல் செலவு சுருக்கமாக ஏற்படும். சொந்தமாகக் கார் இருந்தால், சிற் றுார்களுக்கெல்லாம் சிறந்த முறையில் புத்தகங்களை அனுப் பலாம். இதல்ை அளவிறந்த வசதிகளும், கலன்களும் மாவட்ட நூலக ஆணைக் குழுவினருக்கு ஏற்படும் என் பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

நூலகங்கள் தாங்கள் வைத்திருக்கும் நூற்களைப் பிற நூலகங்களுக்கு அனுப்பிப் புத்தகப் பரிமாற்றம் செய்தல் (Exchange of Books & Periodicals) bravă ă glosp யில் சிறப்பான இடத்தைப் பெறும் நூலகங்கள் இங்ங் னம் புத்தகப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னல் தங்கள் நூற்களைச் சிறுசிறு தொகுப்பாகப் பிரித்து வைத்துக் கொள்ளும். ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு பெட்டியி னுள் அடங்கிவிடும். இங்ங்னம் பெட்டிகளில் அடங்கும் நூற்ருெகுதிக்கு ஆங்கிலத்தில், 'Box Libraries' என்று கூறப்படும். கையடக்கமான பதிப்பு என்று குறிப்பிடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/80&oldid=589860" இலிருந்து மீள்விக்கப்பட்டது